ஜே.கே.ரித்தீஷ் தயாரிக்கும் தப்பாட்டம்

Bookmark and Share

ஜே.கே.ரித்தீஷ் தயாரிக்கும் தப்பாட்டம்

நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் நன்கு அறியப்பட்டவர் ஜே.கே.ரித்தீஷ். இவர் சொந்தமாக சாகியா செல்லுலாய்ட்ஸ் என்ற  தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார்.

இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக ‘தப்பாட்டம்’ என்ற படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக துரை சுதாகர் என்ற புதுமுக நடிகர் நடிக்கிறார். கதாநாயகியாக டோனா ரோசாரியோ நடித்துள்ளார். 

முஜிபூர் என்பவர் இப்படத்தை இயக்குவதுடன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் துளசி ரூபி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தப்படிக்கும் கலைஞனுக்கும், ஒப்பாரி வைக்கும் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது.

இருவரும் ஊரே மெச்சும் சிறந்த தம்பதியாக வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராவிதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்து இவர்களது உறவில் பிளவை ஏற்படுத்துகிறது. இருவராலும் பிரச்சினைகளை சமாளிக்க முடிந்ததா? மீண்டு வந்தார்களா? என்பதை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி மிகவும் எதார்த்தமாக வடிவமைத்துள்ளாராம் இயக்குனர்.  மனித உறவுகளின் மகத்துவத்தையும், உண்மையும் இப்படம் ஆணித்தனமாக கூறும்படி இருக்கும். இக்கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து 1980 பிண்ணனிகளில் நடக்கும்படியாக கதை இடம்பெற்றுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி அனைவரின் மனதையும் உருக்கும்படியாக அமையும் என்று நமபிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் முஜிபூர். 

முஜிபூர் பிரபல இயக்குனர்கள் மகேந்திரன் மற்றும் பிரியதர்ஷன் ஆகியோரிடன் பணியாற்றியவர். இதற்கு மூன் ‘இரு நதிகள்’ எனும் படத்தை இயக்கியுள்ளார். கதாநயாகனான துரை சுதாகர் இப்படத்தில் தப்பாட்ட கலைஞராக வருகிறாராம். இந்த கதாபாத்திரத்திற்காக 40 நாட்கள் சிறப்பு பயிற்சியை மேற்கொண்டு நடித்துள்ளார்.

பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, சென்னை, திருவனந்தபுரம், நாகர்கோவில் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தை தீபாவளி தினத்தன்று வெளியிட மும்முரமாக செயல்ப்பட்டு வருகின்றனர். பழனி பாலு இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  


Post your comment





Related News
மீண்டும் கதையின் நாயகனாக களமிறங்கும் ராஜ்கிரண்
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
இயல்பான காதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் நடிகர் ராஜ்கமல்
கமல்ஹாசனை சந்திக்க விரும்புகிறேன்: இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் பேட்டி
பிரபல நடிகரின் மனைவி பர்வதம்மா மரணம்- வருத்தத்தில் திரையுலகினர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions