காக்கா முட்டை மூலம் நல்ல மார்க் எடுத்த ஜோ மல்லூரி!

Bookmark and Share

காக்கா முட்டை  மூலம் நல்ல மார்க் எடுத்த ஜோ மல்லூரி!

பாரதிராஜாவின் உதவி இயக்குநர், பாடலாசிரியர், கவிஞர் பேச்சாளர் என்று இருந்த போதெல்லாம் கிடைக்காத அடையாளம் ஒரு நடிகராகி கும்கி படத்தில் நடித்தபிறகு ஜோ மல்லூரிக்கு கிடைத்தது.

கும்கி-க்கு பிறகு ரம்மி ,ஜில்லா ,அஞ்சான் ஜன்னல் ஓரம், மொசக்குட்டி ,இரும்புக்குதிரை என இதுவரை 11 படங்களில் கலந்து கட்டி பல ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் காக்கா முட்டை படத்தில் நடித்ததில் தேசியவிருது பெற்ற மாதிரி தலை கொள்ளாத சந்தோஷத்தில் இருக்கிறார்.

காரணம் படத்தைப் பார்த்து விட்டு பாரதிராஜா பாராட்டியிருக்கிறார். தேசிய விருது தேர்வுக்குழுத் தலைவராக இருந்த போது பாரதிராஜா படம் பார்த்து இருக்கிறார். தேசிய விருதுக் குழுவில் இருந்தவர்களும் ஜோ மல்லூரியை இவர் யார் என்று கேட்டார்களாம்.

இவன் என் உதவியாளன் தான் என்றிருக்கிறார். பெருமையாக.இது பற்றி பாரதிராஜாவே ஜோமல்லூரியிடம் கூறியிருக்கிறார். முந்தைய படங்கள் பற்றி எல்லாம் பெரிதாகச் சொல்லாத அவர் காக்கா முட்டை படத்தைப் பார்த்துவிட்டு நீ ரொம்ப பிரமாதமாக பண்ணியிருக்கேடா. ரொம்ப நேர்த்தியா இருக்குடா. படம் பார்த்து பலரும் உன்னை விசாரித்தார்கள்டா என்று கூறினார்.

எனக்கு தேசிய விருதே கிடைத்தமாதிரி சந்தோஷம். காக்கா முட்டைபடத்துக்காக நான் நடித்தது வெறும் ஆறு நாட்கள்தான், படம் பார்த்துவிட்டு இப்போது பலரும் பாராட்டும் போது இயக்குநர் மணிகண்டனின் திறமையை எண்ணி ஆச்சரியப்பட்டேன்.

என்கிறார்  ஜோ மல்லூரி இப்போது சைனா, ஸ்ட்ராபெரி ,சண்டைக்கோழி-2 ,புலி, திருநாள் போன்ற பல படங்களைக் கையில் வைத்திருக்கிறார். குறிப்பாகத் திருநாள் படத்தில் நயன்தாராவின் அப்பாவாக  நடிப்பது அவருக்கு மேலும் ஒரு ப்ரமோஷன்தான்.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
காற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions