ஜோக்கர் குரு சோமசுந்தரத்துக்கு வில்லனான சிம்ரனின் கணவர்

Bookmark and Share

ஜோக்கர் குரு சோமசுந்தரத்துக்கு வில்லனான சிம்ரனின் கணவர்

சமீபத்தில் வெளிவந்து விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘ஜோக்கர்’ படத்தில் நடித்தவர் குரு சோமசுந்தரம். ஏற்கெனவே, சில படங்களில் இவர் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும், ‘ஜோக்கர்’ படம் இவருக்கு ஹீரோ அந்தஸ்தை வழங்கி கௌரவித்தது.

இந்நிலையில், குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவான மற்றொரு படம் இப்போது வெளியாகவிருக்கிறது. ‘ஜோக்கர்’ படத்திற்கு முன்பே உருவான இப்படத்திற்கு ‘ஓடு ராஜா ஓடு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் நான்கு கதாபாத்திரங்களுக்குள் ஒரே நாளில் நடக்கும் கதை. 

நான்கு பேருக்கும் ஒவ்வொரு இலக்கு. அதை அடைய அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அதனால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இந்த நால்வரும் ஒருவரையொருவர் சந்திக்கும்போது என்ன நேர்கிறது என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள். 

இப்படத்தில் குரு சோமசுந்தரத்துடன் சாருஹாசன், நாசர், ஆனந்த் சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லட்சுமி பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் வில்லனாக சிம்ரனின் கணவர் தீபக் இப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். இப்படத்தை நிஷாந்த் ரவீந்திரன், ஜதின் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். 

படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் சோகமாகவே காட்சியளிக்கும். அந்த கதாபாத்திரங்களுக்கு வரும் பிரச்சினைகள் அதிகமாக அதிகமாக படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் நகைச்சுவையை உண்டாக்கும். இந்த படத்தை டார்க் காமெடி என்ற புதிய பாணியில் படமாக்கியிருக்கிறார்கள். டோஷ் என்பவர் இசையமைத்திருக்கிறார். ஜதின் ஷங்கர் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் மூலன் என்பவர் தயாரிக்கிறார். 


Post your comment





Related News
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது கிடைத்த சந்தோசம் தாண்டி வருத்தம் இருக்கிறது - எஸ் ஆர் பிரபு
ஜோக்கர் பட நாயகன் குரு சோமசுந்தரம் வில்லன் ஆகிறார்
ஜோக்கர் முழு வசூல் விவரம் வெளியானது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions