துல்கர் படத்தின் மூலம் இயக்குனராகும் ஒளிப்பதிவாளர்..!

Bookmark and Share

துல்கர் படத்தின் மூலம் இயக்குனராகும் ஒளிப்பதிவாளர்..!

2012ல் 'சாப்பா குரிஷ்ய', 2013ல் தட்டத்தின் மறயத்து' என மலையாள திரையுலகின் ட்ரென்ட் செட்டர்களாக அமைந்த இந்த இரண்டு படங்களில் ஒன்று 'புலிவால்' என்கிற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிவிட்டது.

இன்னொன்று 'மீண்டும் ஒரு காதல் கதை' என்கிற பெயரில் ரீமேக் ஆக இருக்கிறது. இந்த இரண்டு படத்திற்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை படத்தின் கேமராமேன் ஜோமன் டி.ஜான் தான். அதுமட்டுமல்ல தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தின் ஒளிப்பதிவாளரும் இவர்தான்.

கடந்த வருடம் நடிகை ஆன் அகஸ்டினை திருமணம் செய்த நேரமோ என்னவோ, அதன்பிறகு இவரது ஒளிப்பதிவில் வெளியான 'விக்ரமாதித்யன்' மற்றும் 'பிக்கெட்-43' ஆகிய படங்கள் சூப்பர்ஹிட்டானதுடன் ஒளிப்பதிவிற்காகவும் பேசப்பட்டன.

இப்போது ஜாக்பாட் அடித்தது போல துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராகவும் மாற இருக்கிறார்.  ஏற்கனவே 'ஏபிசிடி', மற்றும் விக்ரமாதித்யன் ஆகிய படங்களில் துல்கருடன் இவர் பணியாற்றியுள்ளார்.

அந்த நட்பின் அடிப்படையிலும், இவரது திறமையைக்கண்டும் இந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்துள்ளார் துல்கர் சல்மான். நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ள ஜோமோனின் ஒளிப்பதிவில் 'ஒரு வடக்கன் செல்பி', 'ஏன்னு நின்றே மொய்தீன்', 'நீனா' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions