ஜோதிலக்ஷ்மி புரமோஷனில் சார்மி ரொம்ப பிஸி!

Bookmark and Share

ஜோதிலக்ஷ்மி புரமோஷனில் சார்மி ரொம்ப பிஸி!

டோலிவுட்டின் அதிரடி வெற்றிப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் இயக்கத்தில், நடிகை சார்மி நடித்துள்ள ஜோதிலக்ஷ்மி படம் எதிர் வரும் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் நடிகை சார்மி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டி.வி மற்றும் ரேடியோ நிகழ்சிகளில் சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத் கூட்டாகவும், தனியாகவும் கலந்து கொண்டு படம் குறித்த தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

சார்மி விலைமாதுவாக நடித்துள்ள இப்படத்தில், சத்ய தேவ் நாயகனாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் கல்யாண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுனில் இசையமைத்துள்ளார்.

 


Post your comment





Related News
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
படம் ரிலீசாகும்போது வாய்ஸ் கொடுப்பார்.. மக்கள் பிரச்சினைகளில் சும்மா இருப்பார்: ரஜினி பற்றி ஜோதிமணி
அட இதுக்கூட நல்லா இருக்கே, ஜோதிகாவிற்காக சூர்யா எடுக்கும் வித்தியாசமான ப்ரோமோஷன்
ஜோதிகாவிற்கு, சூர்யா இதை செய்தது படத்துக்காகவா?
நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்-ஜோதிகா கூட்டணி? ரசிகர்கள் கொண்டாட்டம்
ஜோதிகா பட இயக்குனருடன் இணைந்த நிவின் பாலி!
சூர்யா – ஜோதிகா படத்துக்கு கமல் பட டைட்டில்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions