களை கட்டுது வசந்தி சேலை

Bookmark and Share

களை கட்டுது வசந்தி சேலை

நடிகைகள் அணியும் உடைகள், அணிகலன்களை பெண்கள் ஒரு காலத்தில் விரும்பி அணிந்தார்கள். அந்த வகையில் முதல் இடம் பிடிப்பவர் நதியா.

அவர் ஹீரோயினாக, பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் நதியா சேலை, நதியா கம்மல், நதியா கொண்டை, என மார்க்கெட் களை கட்டியது.

அதன் பிறகு குஷ்பு ஜாக்கெட் பிரபலமானது. ஜாக்பாட் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி குஷ்பு ஜாக்கெட்டுக்காகவே செம ஹிட்டானது. இப்போது மீண்டும் அப்படியொரு மார்க்கெட் தலைதூக்கி இருக்கிறது அது வசந்தி சேலை.

36 வயதினிலே படத்தில் ஜோதிகா அணியும் காட்டன் புடவைகளை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனம் டிசைன் செய்து கொடுத்தது. 

தற்போது அதே நிறுவனம் ஜோதிகாவின் படத்தை போட்டு படத்தில் அணிந்த சேலைகளுடன் விளம்பரம் செய்து வருகிறது. படத்தில் ஜோதிகா அணிந்த சேலைளை வசந்தி சேலைகள் என்று விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது.

வசந்தி என்பது 36 வயதினிலே படத்தில் ஜோதிகாவின் கேரக்டர் பெயர். "ஜோதிகா அணிந்த சேலைகள் என்பதை விட ஜோதிகா போன்று சாதிக்க துடிக்கும் பெண்கள் அவரது பாணியில் காட்டன் சேலைகள் அணிவதை கவுரவமாக கருத ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதனால் வசந்தி சேலைகளின் மவுசு கூடியிருக்கிறது. நதியா, குஷ்பு இடத்தை இப்போது ஜோதிகா பிடித்திருக்கிறார். தீபாவளி நெருங்குவதால் அனைத்து ஜவுளி நிறுவனங்களுமே வசந்தி சேலைகளை கொண்டு வரும் வாய்ப்பிருக்கிறது" என்கிறார் பிரபல ஜவுளி நிறுவன அதிகாரி


Post your comment





Related News
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
அட இதுக்கூட நல்லா இருக்கே, ஜோதிகாவிற்காக சூர்யா எடுக்கும் வித்தியாசமான ப்ரோமோஷன்
ஜோதிகாவிற்கு, சூர்யா இதை செய்தது படத்துக்காகவா?
நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்-ஜோதிகா கூட்டணி? ரசிகர்கள் கொண்டாட்டம்
ஜோதிகா பட இயக்குனருடன் இணைந்த நிவின் பாலி!
சூர்யா – ஜோதிகா படத்துக்கு கமல் பட டைட்டில்!
செம கெடுபிடியுடன் உருவாகும் ஜோதிகா படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions