ஜோதிகா படத்துக்கு இசையமைக்கும் கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர்!

Bookmark and Share

ஜோதிகா படத்துக்கு இசையமைக்கும் கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர்!

நடிகை ஜோதிகா ’36 வயதினிலே’ பாணியில் பெண்களை மையப்படுத்திய இன்னொரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ புகழ் பிரம்மா இயக்கி வருகிறார். நடிகரும் ஜோதிகாவின் கணவருமான சூர்யா, இப்படத்தை தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு நேற்று சென்னை தரமணியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளராக கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் ஜோதிகாவுடன் பானுப்ரியா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions