கணவர் பற்றிய புது தகவல் சொல்கிறார் ஜோதிர்மயி..!

Bookmark and Share

கணவர் பற்றிய புது தகவல் சொல்கிறார் ஜோதிர்மயி..!

தலைநகரம், நான் அவன் இல்லை படங்கள் மூலம் தமிழ்ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிந்தவர் மலையாள நடிகை ஜோதிர்மயி. திருமணமாகி அதன்பின் நடிக்க வந்த ஜோதிர்மயி, பின்னர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக இருந்தார்.

சமீபத்தில் தான் பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் அமல் நீரத்தை திருமணம் செய்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகத்தை ஆச்சர்யப்பட வைத்தார். அமல் நீரத் மலையாள சினிமாவில் அருமையான ஒரு ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல, திறமையான இயக்குனரும் கூட.

 ஆனால் இதே அமல் நீரத்தும், ஜோதிர்மயியும் ஒரே கல்லூரியில், ஒரே காலகட்டத்தில் படித்தவர்களாம். அப்போதெல்லாம் அமல் நீரத் கல்லூரிக்கே 'பெரியண்ணா' மாதிரியாம். ஜோதிர்மயி உட்பட பல மாணவிகள் எதுவும் பிரச்சனை என்றால் அவரைத்தான் நாடுவார்களாம்.

திருமணமாகி விவாகரத்தான ஒரு பெண் என்னென்ன நிகழ்வுகளை இந்த சமூகத்தில் எதிர்கொள்வாளோ, அந்த சங்கடங்களை எல்லாம் சந்தித்து மனம் புழுங்கிய நேரத்தில் ஜோதிர்மயியின் காயங்களுக்கு மருந்தாக வந்தாராம் அமல் நீரத்.

ஒருகட்டத்தில் அவருடன் காதலில் விழுந்த ஜோதிர்மயி, அதன்பின்னர் தான் குடும்பத்தார் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions