பஞ்சாபி மொழியில் ரீமேக்காகும் முதல் மலையாள படம்..!

Bookmark and Share

பஞ்சாபி மொழியில் ரீமேக்காகும் முதல் மலையாள படம்..!

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் 'ஷட்டர்'. மலையாள இயக்குனர் ஜாய் தாமஸ் இயக்கிய இந்தப்படத்தில் சீனிவாசன், லால், வினை போர்ட் ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தார்கள்.

விலைமாது ஒருத்தியிடம் சுகம் அனுபவிக்கவேண்டி, பூட்டிய அறைக்குள் சிக்கிக்கொண்டு, தனது மனைவி குழந்தைகளுக்கு தெரிந்தால் மானம் போய்விடுமே என ஒருநாள் முழுவதும் லால் அனுபவிக்கும் பதற்றம் தான் படத்தின் மொத்தக்கதையும்.. ஒரு ஷட்டர் மூடிய கடையை வைத்தே இரண்டு மணி நேரம் விறுவிறுப்பாக படத்தை இயக்கியிருந்தார் ஜாய் தாமஸ்.

இந்தப்படம் தமிழ், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது ஏற்கனவே தெரிந்த தகவல் தான். இப்போது லேட்டஸ்ட் தகவலாக இந்தப்படம் பஞ்சாபியிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

இதுவரை எந்த ஒரு மலையாளப்படமும் பஞ்சாபி மொழியில் ரீமேக் செய்யப்படவில்லை என்பது ஆச்சர்யமான தகவல். தமிழ் ரீமேக்கை எடிட்டர் ஆண்டனியும், மராத்தி ரீமேக்கை மலையாள இயக்குனர் வி.கே.பிரகாஷும் இயக்கவுள்ளார்கள்.


Post your comment





Related News
காற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
மோகன்லாலை கிண்டல் செய்த ஜாய் மேத்யூ..!
ஜோதிகாவின் ஈடுபாடு: வியக்கும் வசனகர்த்தா விஜி
சூர்யா மகன் பிறந்தநாளை கொண்டாடிய சமூக வலைதள ரசிகர்கள்
ஜோதிகாவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் குரலும் தமிழும்
கார்த்தி கல்யாணத்திற்கு ஜோதிகா கொடுத்த டிப்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions