ஜோதிகாவின் ஈடுபாடு: வியக்கும் வசனகர்த்தா விஜி

Bookmark and Share

ஜோதிகாவின் ஈடுபாடு: வியக்கும் வசனகர்த்தா விஜி

அண்மையில் வந்து வெற்றிப் படமான 36 வயதினிலே படத்தின் ஜோதிகாவின் நடிப்புக்குப் பிறகு பேசப்பட்ட ஒன்று என்றால் அது வசனகர்த்தா விஜியின் வசனம்தான். ராதாமோகனின் அழகியதீயே , மொழி, கௌரவம் படங்களுக்கு வசனம் எழுதிய விஜி வெள்ளித்திரை படத்தை இயக்கியும் உள்ளவர்.

36 வயதினிலேவுக்கு வசனம் எழுதும்  வாய்ப்பை விஜியை அழைத்து அப்படத்தைத்  தயாரித்த நடிகர் சூர்யா வழங்கியுள்ளார். அந்த அனுபவம் பற்றி விஜி கூறும் போது. "இதற்கு முன் மொழி படத்துக்கு வசனம் எழுதினேன். அதில் ஜோதிகா பேசும் வாய்ப்பு இல்லை என்றாலும் படத்தின் மற்ற வசனங்களை வெகுவாக ரசித்தார், பாராட்டினார். மொழி படத்துக்காக மிகவும் பெருமைப்பட்டார்.

மொழி யூனிட் மீது அவருக்கு தனி அன்பு, மரியாதை உண்டு. மொழிதான் அவர் நடித்த கடைசிப்படம். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார்.மொழி முடிந்த போது சொன்னார், மொழி என்கிற ஒரு படத்தில் நடிக்கத்தான் நான் பத்து வருடங்களாக மற்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன் என்று சொல்ல வேண்டும்.

நான் மொழி என்கிற படத்தில் நடிக்காமல் மட்டும் போயிருந்தால் எனக்கென்று எந்த அடையாளமும் இல்லாமல் போயிருக்கும் என்றார். இந்த 36வயதினிலே படத்தின் வசனங்களை மொத்தமாக எழுதி அவரிடம் கொடுத்து விட்டேன். எப்படி பேச வேண்டும் என்பதை நானே உரிய உச்சரிப்பு ஏற்ற இறக்கத்துடன் பேசி, குரல் பதிவு செய்தும் கொடுத்து விட்டேன்.

அதை அவர் கேட்டு கேட்டு மனப்பாடம் செய்து பேசிப்பார்த்து தயாராகிவிட்டார். பரீட்சைக்குப் படிப்பது போல அதே வேலையாக இருந்தார் என்ற சூர்யாவே சொல்லியிருக்கிறார். ஜோதிகா எந்த சந்தேகம் இருந்தாலும் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வார். மொழி படத்தில் நடிக்கும் போது கூட அவருக்கு அவ்வளவாக தமிழ் வராது. இந்த எட்டு வருஷத்தில் தமிழைக்கற்று இருக்கிறார்.

முக்கியமான வசனம் பேசி நடிக்கும் காட்சி பற்றி முன்னதாகவே சொல்லி விடுவார். எப்படி நடித்திருக்கிறேன் என்று கேட்பார். இப்படத்தில் க்ளைமாக்சுக்கு முன்பு வரும் கணவருடன் மகள் பிரியும் போது முழு குமுறல்களைக் கொட்டித்தீர்க்கும் காட்சியில் நடிக்கும் போது கிளிசரின் போடாமலேயே கண்ணீர் விட்டு நடித்தார்.

கிளிசரின் போடாமலேயே நடிக்கப் போகிறேன், அதுதான் அந்தக் காட்சிக்கு நான் தரும் மரியாதை என்றார். அது போலவே நடித்து அசத்தியிருந்தார். அந்த ஆர்கானிக் சம்பந்தப்பட்ட நீளமான வசனங்களிலும் அசத்தியிருந்தார். படமும் பெரிய வெற்றிப் படமாகி விட்டது.

அவருக்கு மட்டுமல்ல வசனம் எழுதிய எனக்கும் பெரிய அடையாளத்தை தேடித் தந்துள்ளது.. வசனங்களை பதிவு செய்து கொடுத்து இருந்ததால் நான் தினசரி படப்பிடிப்பு தளத்துக்குப் போக அவசியமில்லை. ஆனாலும் எப்படிப் பேசி நடித்துள்ளேன்  என்று ஆர்வமாக மறுநாள் கேட்பார் என்று ஜோதிகாவின் ஈடுபாட்டை எண்ணி வியக்கிறார் வசனகர்த்தா விஜி.   


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions