ரசிகனின் குடும்பத்தை காப்பாற்றிய ஜூனியர் என்.டி.ஆர்

Bookmark and Share

ரசிகனின் குடும்பத்தை காப்பாற்றிய ஜூனியர் என்.டி.ஆர்

நடன அசைவுகளாலும் நடிப்பாலும் ரசிகர்களை சம்பாதித்த தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நல்ல மனிதராகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி மரணமடைந்த தனது ரசிகனின் குடும்பத்தை காப்பாற்ற நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் முன்வந்துள்ளது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

தனது திருமணத்திற்கு உறவினர்களை அழைக்கச் சென்ற ராஜசேகர் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் சென்ற மீதி மூன்று பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ராஜசேகர் தனது தீவிர ரசிகன் என்பதை அறிந்த ஜூனியர் என்.டி.ஆர் தனது குழுவினரை ராஜசேகரின் இறுதிச் சடங்கில் பங்கு கொள்ள செய்தார்.

இதற்கு ராஜசேகர் குடும்பத்தினர் ஜூனியர் என்.டி.ஆரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது தன்னால் ஆன உதவிகளை செய்வேன் என்று  ராஜசேகர் குடும்பத்தினரிடம் கூறிய ஜூனியர் என்.டி.ஆர் நிதி உதவியும் செய்துள்ளார்.

இதே போல் பாட்ஷா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் எதிர்பாராத விதமாக உயிரிழந்த ரசிகனின் குடும்பத்திற்கும் ஜூனியர் என்.டி.ஆர் உதவி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions