ஜூனியர் என்.டி.ஆரின் தம்பியான தமன்

Bookmark and Share

ஜூனியர் என்.டி.ஆரின் தம்பியான தமன்

தெலுங்கு திரை உலகின் மாஸ் மகாராஜா ரவிதேஜா நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள கிக் 2 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.  

என்.டி.ஆர் குடும்ப வாரிசான நடிகர் கல்யாண் ராம் தயாரிப்பில் உருவாக்கி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பேசும் போது, இசையமைப்பாளர் தமன் தனது சகோதரனைப் போன்றவர். இசையமைப்பாளர் மணிசர்மாவிடம் தமன் உதவியாளராக இருக்கும்போதே அவரது கடின உழைப்பை தான் பல முறை பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற இசையமைப்பாளராக வலம் வரும் தமன் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தின் வாயிலாக நடிகராக தமிழ் திரைக்கு அறிமுகமானவர்.

பின்னர் தான் இசையின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக இசையமைப்பாளராக தன்னை வளர்த்துக் கொண்டு பல வெற்றிப் பாடல்களை கொடுத்து வருகின்றார். 


Post your comment





Related News
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
முன்னணி நடிகருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ்- ரசிகர்கள் உற்சாகம்
பிரபல நடிகரின் வித்தியாசமான கெட்டப்- வைரலான புகைப்படம்
போலீஸ் வேடத்தில் நடிக்கும் பாடகர் கிரிஷ்!
வசூலில் சக்கைப்போடு போடும் பஜ்ரங்கி பைஜான்
சல்மான் படத்தின் வசூலை சயீப் படம் மிஞ்சும் : கரீனா
பாகிஸ்தானிலும் வரவேற்பு பெற்ற பஜ்ரங்கி பைஜான்
பஜ்ரங்கி பைஜான் மலையாளப் படத்தின் இன்ஸ்பிரேஷன் ?
பாகிஸ்தான் சென்சாரிடமும் பாஸ் மார்க் வாங்கிய பஜ்ரங்கி பாய்ஜான்
லிங்காவால் சல்மானுக்கு ரெட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions