இரண்டாம் முறையாக தேசிய விருது பெறும் JSK ஃபிலிம் கார்பரேஷன்

Bookmark and Share

இரண்டாம் முறையாக தேசிய விருது பெறும் JSK ஃபிலிம் கார்பரேஷன்

தமிழ் திரையுலகில் யதார்த்தமான கதைகளை  மற்றும் மனித உணர்வுகளை எடுத்து சொல்லும் கதைகளை கலையுணர்வோடு தயாரித்து தனக்கென தனியிடத்தை பிடித்துள்ள நிறுவனம் JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம்.

சினிமாவின் மீது அதித பற்றுடைய   JSK சதிஷ் குமார் அத்தகைய தமிழ் திரைப்படங்களை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கொண்டு சென்று பற்பல விருதுகளையும், பெருமைகளையும் தமிழ் சினிமாவிற்கு பெற்று தந்துள்ளார்.JSK ஃபிலிம் கார்பரேஷன் தயாரித்துள்ள ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் பெருமிதத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சிறந்த பிராந்திய  திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது.

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும்  62 ஆம் தேசிய விருது வழங்கும் விழாவில் JSK சதீஷ் குமார் இவிருதினை பெறுகிறார். கடந்த வருடம் ‘தங்க மீன்கள்’ திரைப்படதிற்கு இவ்விருதினை வென்ற JSK சதீஷ் குமார் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக தேசிய விருது பெறும் பெருமையையும் பெற்றுள்ளார்.

“இரண்டாவது முறை தேசிய விருது வாங்குவது மிகவும் பெருமிதமான தருணம். ரசிகர்களுக்கு தரமான படங்களை கொடுப்பதே  எங்கள் முழுமுதற் நோக்கம். JSK ஃபிலிம் கார்பரேஷன் மேலும் ‘நாலு போலிசும் நல்லா இருந்தா ஊரும்’, ‘அண்டாவ காணோம்’, ‘தரமணி’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ என பல நல்ல படங்களை தயாரித்து வருகிறது.

எங்கள் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள JSK ஆடியோ நிறுவனம் திரை இசையை அனைத்து தொழில்நுட்ப வாயில்கள் மூலமாக அனைவருக்கும் கொண்டு சேர்த்து வருகிறது.   JSK ஃபிலிம் கார்பரேஷன் ஒவர்சீஸ் வெளியீடுகளையும் கவினிக்க தயாராகி வருகிறது.

‘குற்றம் கடிதல்’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவும் திட்டமிட்டு வருகிறோம். இன்னும் சில பட வாய்ப்புகளும் பாலிவுட்டில் இருந்து வந்த வண்ணம் உள்ளது விரைவில் அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்\பட்டு வருகிறது.

எங்கள் நிறுவனத்தின் பெரும் தூணாய்  விளங்கும் அனைத்து ரசிகர்களுக்கும், எங்களது வெற்றிக்கு துணையாய் நிற்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள் , திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” எனப் பெருமிதத்துடன் கூறினார் JSK சதீஷ் குமார்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஓவியா' பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே சதீஸ்குமார்..!
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions