ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கு இப்படியொரு டைட்டிலா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

Bookmark and Share

ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கு இப்படியொரு டைட்டிலா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் வீர தமிழச்சி என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா.

பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இதனையடுத்து ஜூலி பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார்.

இந்நிலையில் தற்போது ஜூலி K7 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். மேலும் இந்த படத்தில் ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

 இது குறித்து ஜூலியிடம் கேட்டதற்கு ஆம், இந்த தகவல்கள் உண்மை தான். இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. மேலும் இந்த படம் என் வாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புவதாக கூறி இந்த செய்தியை உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு உத்தமி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன..

 


Post your comment





Related News
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பிளான் இதுதானாம்!
சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த ரஜினிகாந்த் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக விஜயின் தந்தை, உச்சகட்ட கோபத்தில் தளபதியன்ஸ் - என்ன நடந்தது?
சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படியொரு மாஸா? - மெர்சலான ரசிகர்கள்.!
நடிகைகளோடு டூயட் பாடுற வேலைய பாருங்க என கூறியவர்களுக்கு நெத்தியடி கொடுத்த சூப்பர் ஸ்டார்.!
சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி, இப்படியொரு ரோலா? - கொண்டாடும் ரசிகர்கள்.!
கெத்தாக வெளியான சூப்பர் ஸ்டாரின் காலா டீஸர் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions