சண்டைக் காட்சிகளில் அதிக அக்கறை எடுக்கும் ஜூனியர் என்.டி.ஆர்

Bookmark and Share

சண்டைக் காட்சிகளில் அதிக அக்கறை எடுக்கும் ஜூனியர் என்.டி.ஆர்

டோலிவுட்டின் வெற்றி பட இயக்குநர் பூரி ஜெகனாத் இயக்கத்தில் அதிரடி நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் திரைக்கு வந்த டெம்பர் திரைப்படம் 50வது நாளைக் கடந்து வெற்றி நடை போட்டு வருகின்றது.

இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தற்போது இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் மா நானாகி பிரேமதோ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதிலும் இப்படத்திற்காக அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் தற்போது படமாக்கபட்டு  வருகின்றது. இந்தியாவின் முன்னணி சண்டைக் கலை இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் பீட்டர் ஹெய்ன் இப்படத்தில் பணியாற்றி வருகின்றார்.  

ஜூனியர் என்.டி.ஆர் இப்படத்தில் சண்டைக் காட்சிகளில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகின்றாராம். அதிக ஓய்வு எடுக்காமலும் சிறு காயங்கள் ஏற்பட்டால் அதை பொருட்படுத்தாமலும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சண்டைக் காட்சிகளில் நடித்து வருவது படக்குழுவினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். 


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions