நடிகையின் மொபைல் சாட்டிங்கால் டென்ஷன் ஆன ஜூனியர் என்.டி.ஆர்...!

Bookmark and Share

நடிகையின் மொபைல் சாட்டிங்கால் டென்ஷன் ஆன ஜூனியர் என்.டி.ஆர்...!

ஜூனியர் என்.டி.ஆர் ஆந்திராவின் முன்னணி ஹீரோ. அவரை இந்த அளவுக்கு உயரத்தில் கொண்டுபோய் வைத்ததில், செய்யும் தொழிலுக்கு அவர் கொடுக்கும் மரியாதையும், உடன் பணிபுரியும் சக கலைஞர்களையும் மதிப்பதும் மிக முக்கிய காரணங்கள்.. அதுமட்டுமல்ல, படப்பிடிப்பில் வீண், வெட்டி அரட்டைகளையும் அவ்வளவாக விரும்பாதவர்.

தற்போது பூரி ஜெகநாத் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கில் நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் தான் 'டெம்பர்'... இந்தப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தாலும், இன்னொரு நாயகியாக. பாலிவுட்டை சேர்ந்த மதுரிமா பானர்ஜியும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஜூனியர் என்.டி.ஆருக்கு மதுரிமாவை பிடிக்கவில்லை என ஏற்கனவே சொல்லியிருந்தோம். ஏன் பிடிக்கவில்லை என்கிற உண்மை இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது.. மதுரிமா படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே எப்போது மொபைல் போனை நோண்டிக்கொண்டிருப்பது, யாருடனாவது போனிலேயே நீண்டநேரம் பேசிக்கொண்டிருப்பதுமாகவே இருந்திருக்கிறார்.

இதனால் ஷாட் ரெடி என அழைத்தால் கூட, உரிய நேரத்தில் வராமல் ஜுனியரை எரிச்சலடைய செய்திருக்கிறார்.. சில நாட்கள் தான் அவரது போர்ஷன் என்பதால் அப்போது, கோபத்தை  அடக்கிக்கொண்டாராம் ஜூனியர் என்.டி.ஆர்.  கேரக்டருக்கு சரியாக இருக்கிறார் என்பதற்காக மதுரிமாவை புக் பண்ணிய பூரி ஜெகநாத்தும் ஜூனியர் என்.டி.ஆரின் சங்கடத்தையும், மன ஓட்டத்தையும் அப்போதே புரிந்துகொண்டார்.

அதனால் தான் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸின்போது மதுரிமா கலந்துகொண்டு அதில் ஏதாவது பந்தா காட்டினால், அதன்மூலம் தேவையில்லாத சங்கடங்கள் எதுவும் உருவாகிவிட கூடாது என்பதால், விழாவில் கலந்துகொள்ள மதுரிமாவுக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்த்துவிட்டாராம்.  


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions