ஜூனியர் என்.டி.ஆரின் அதிரடி மாற்றம்

Bookmark and Share

ஜூனியர் என்.டி.ஆரின் அதிரடி மாற்றம்

தெலுங்கு திரை உலகின் அதிரடி நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்து  சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்த டெம்பர் படத்தினைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சுகுமார் இயக்கும் படத்தில் அவர் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஜூன் 17 ஆம் தேதி முதல் பிரிட்டனில் நடைபெறவுள்ளன. இப்படத்திற்காக ஜூனியர் என்.டி.ஆர் தனது தோற்றத்தை முழுவதுமாக மாற்றியுள்ளார். 

தாடி மற்றும் முடி வளர்ந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படும் ஜூனியர்.என்.டி.ஆரின் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளன. இதனால் இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் கதாபாத்திரம் குறித்து அறியும் ஆவல் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

தயாரிப்பாளார் பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரித்து வரும் இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார்.

முதன் முறையாக ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஏற்கனவே இப்படத்திற்கென ஐந்து பாடல்களை இசையமைத்து முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions