சென்டிமென்டால் ஜூனியர் என்டிஆர் படத்தலைப்பில் மாற்றம்

Bookmark and Share

சென்டிமென்டால் ஜூனியர் என்டிஆர் படத்தலைப்பில் மாற்றம்

திரைப்படங்களுக்கு பெயர் வைப்பதிலும் சிலர் சென்டிமென்ட் பார்ப்பதுண்டு. கதைக்களம் வலுவாக இருந்தால் எந்த திரைப்படமும் ஜெயிக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

சில நேரங்களில் யாராவது ஒருவர் இந்த சென்டிமென்டை கையில் எடுத்தவுடன், பிரபலங்களின் மனதில் கூட சிறிய சஞ்சலம் ஏற்படுவது இயல்பு தான். தற்போது பிரபல ஹீரோவான ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் புதிய படத்திற்கு நான்னக்கு பிரேமதோ என்ற தலைப்பு வைக்கப்பட்டது.

இதற்கு முன்பு ஜூனியர் என் டி ஆர் நடித்த நா அல்லுடு மற்றும்  நாகா போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. அதற்கு அந்த படங்களின் தலைப்பில் முதல் எழுத்தாக நா வந்ததனால் தான் என்று சிலர் கூறியுள்ளனர்.

அதனை அடுத்து இந்த படத்தலைப்பிலும் முதல் எழுத்தாக நா வருவதால் இந்த படமும் சரியாக போகாது என்று சிலர் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். இதனை அடுத்து இந்த படத்திற்கு மா நான்னக்கு  பிரேமதோ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஜூனியர் என் டி ஆருக்கு ஜோடியாக அழகு தேவதையான ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தை பி வி எஸ் என் பிரசாத் தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

 


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions