ஜூனியர் என்டிஆரின் நடனத்துக்கு அடிமையான அலியா பட்!

Bookmark and Share

 ஜூனியர் என்டிஆரின் நடனத்துக்கு அடிமையான அலியா பட்!

இந்தியில், ஸ்டூடன்ஸ் ஆப் த இயர், ஹைவே, 2 ஸ்டேட்ஸ் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் அலியா பட். அதோடு இந்தியா முழுக்க ஏராளமான இளவட்ட ரசிகர்களை கவர்ந்திழுத்து வைத்திருக்கும் அலியா பட்டுடன் நடிக்க வேண்டும் என்பது இன்றைய பல முன்னணி ஹீரோக்களின் விருப்பமாகவும இருந்து வருகிறது.

அந்த வகையில், தனுஷ்கூட அலியா பட்டின் நடிப்பு தனக்கு பிடிக்கும் என்று சில பேட்டிகளில் கூறியிருப்பவர், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தான் நடித்த அனேகன் படத்திலேயே அவரை நடிக்க வைக்க முயற்சி எடுத்தார். ஆனால் அப்போது ஏற்பட்ட கால்சீட் பிரச்சினையால் அப்படத்தில் அலியா பட் நடிக்கவில்லை.

இருப்பினும், எப்படியேனும் அலியா பட்டுடன் ஒரு படத்தில் டூயட் பாடுவேன் என்று சொல்லிக்கொண்டு வருகிறார். ஆனால், இப்படி தனுஷ் போன்று பல ஹீரோக்கள் அலியாபட்டுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசைப்பட, அவருக்கோ, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரின் நடிப்புதான் ரொம்ப பிடிக்குமாம்.

குறிப்பாக அவரது டான்சுக்கு அலியா பட் அடிமையாம். அதனால் அவருடன் ஒரு படத்திலேனும் டூயட் பாடி விடவேண்டும் என்று தனது ஆவலை வெளிப்படுத்தியிருக்கிறார் அலியாபட்.

இந்த விசயத்தை அவர் ஜூனியர் என்டிஆரிடமே ஓப்பனாக சொல்ல, விரைவில் உங்கள் ஆசை நிறைவேறும் என்று அலியாபட்டுக்கு வாக்குறுதி வழங்கியிருக்கிறாராம்.  


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
பிரபாஸுடன் நடிக்க மறுத்த ஆலியா பாட் - காரணம் இது தானாம்.!
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
பிக் பாஸ் சீசன்-2-வை தொகுத்து வழங்க போவது யார்?
அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions