ஜூனியர் என் டி ஆருடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர்

Bookmark and Share

ஜூனியர் என் டி ஆருடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர்

தொடர்ந்து ஜூலாயி, அதரின்டிகி தரேடி மற்றும் சன் ஆப் சத்ய மூர்த்தி என ஹாட்ரிக் வெற்றி படங்களை தந்த பிரபல இயக்குனர் திரிவிக்ரம் அடுத்து எந்த பிரபல ஹீரோவை வைத்து படம் பண்ணப்போகின்றார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்நிலையில் அவர் ஜூனியர் என் டி ஆருடன் இணைந்து புதிய படம் பண்ண போகின்றாராம். முன்னதாக அவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் வைத்து கொபலி என்ற படத்தை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் தான் அவர் தற்போது யங் டைகர் ஜூனியர் என் டி ஆருடன் இணைகிறார் என்ற உறுதியான தகவல் வெளிவந்துள்ளது. இந்த புதிய படம் வரும் ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் தொடங்க இருக்கின்றதாம்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெய்ன்மென்ட் சார்பாக சுர்யதேவர நாகவம்சி தயாரிக்கிறாராம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகின்றது. இயக்குனர் திரிவிக்ரம் இந்த படத்தை முடித்து விட்டு அதன் பிறகே பவர் ஸ்டாருடன் இணைகிறாராம்.

 


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
பிக் பாஸ் சீசன்-2-வை தொகுத்து வழங்க போவது யார்?
சூர்யா, விக்ரமை தொடர்ந்து இன்னொரு முன்னணி நடிகரை இயக்கும் ஹரி!
பரபரப்பை ஏற்படுத்திய ஜுனியர் என்.டி.ஆர் டுவிட்!
ஜூனியர் என்.டி.ஆர் படமும் தமிழில் மொழிமாற்றம்!
மீண்டும் மகாபாரதம் பிரமாண்டமாக
உறுதிசெய்யப்பட்ட ஜூனியர் என்.டி.ஆர் படதலைப்பு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions