ஜூராஸிக் வேர்ல்ட்... இரண்டாவது ட்ரைலர் வெளியானது!

Bookmark and Share

ஜூராஸிக் வேர்ல்ட்... இரண்டாவது ட்ரைலர் வெளியானது!

ஜூராஸிக் பார்க்கின் நான்காவது பாகம் எனப்படும் ஜூராஸிக் வேர்ல்ட் படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஜூராஸிக் பார்க் படம் 1993-ம் ஆண்டு வெளியானது. அதன் இரண்டாம் பாகம் 1997-ம் ஆண்டு வெளியானது.

இந்த இரு படங்களையும் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கினார். இரண்டுமே பெரும் வெற்றியைப் பெற்றன.இதன் மூன்றாம் பாகம் 2001-வெளியானது. இதனை ஸ்பீல்பெர்க் இயக்கவில்லை. ஜோ ஜான்சன் இயக்கினார்.

ஸ்பீல்பெர்க் நிர்வாகத் தயாரிப்பாளராக பங்கேற்றார். இந்தப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் கழித்து நான்காம் பாகம் வெளியாகவிருக்கிறது. இதற்கு ஜூராஸிக் வேர்ல்ட் என்று பெயரிட்டுள்ளனர்.

கொலின் ட்ரவெரோ இயக்கியுள்ள இந்தப் படம் வரும் ஜூன் 12-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. ஜூராஸிக் வேர்ல்டின் முதல் ட்ரைலர் கடந்த நவம்பரில் வெளியானது.

இரண்டாவது ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் ட்ரைலரை 5 கோடி பேருக்கும் மேல் பார்த்துள்ளனர். இரண்டாவது ட்ரைலர் வெளியான இரண்டே நாட்களில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் யுட்யூபில் பார்த்து ரசித்துள்ளனர்.


Post your comment





Related News
உலகளவில் அடித்து நொறுக்கிய வசூல்! விசயம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்
உலகம் முழுவதும் பாகுபலி படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா- அதிர்ந்த திரையுலகம்
வேர்ல்டு ஹீரோ, நடிகை ஜோடியை பிரித்தது யார் தெரியுமா?
இன்று உலகம் முழுவதும் 1000 அரங்குகளுக்கு மேல் பைரவா ரிலீஸ்!
உலகளவில் தோனியின் பிரம்மாண்ட வசூல் எவ்வளவு தெரியுமா?
உலக திரைப்பட விழாவில் பங்கேற்கும் சூர்யா படம்
உலகம் முழுவதிலும் வசூலில் தனி வரலாறு படைத்த கபாலி!
87 ஆண்டுகளுக்கு முந்தைய டிஸ்னி திரைப்படம் கண்டுபிடிப்பு
தமிழ்ப் படங்களை மிஞ்சும் ஜுராசிக் வேர்ல்டு!
ஜுராசிக் வேர்ல்டு படத்தின் உலக வசூல் சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions