ஜுராசிக் வேர்ல்டு படத்தின் உலக வசூல் சாதனை

Bookmark and Share

ஜுராசிக் வேர்ல்டு படத்தின்  உலக வசூல் சாதனை

உலக அளவில் வெளியான படங்களில் அதிக தொகையை வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அவதார் படம்தான். அதற்கு அடுத்த இடத்தில் டைட்டானிக் படம் உள்ளது. கடந்த 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ஜுராசிக் வேர்ல்டு படத்தின் வசூல் சாதனையைப் பார்த்தால் விரைவில் இந்தப்படமும் உலக வசூல் சாதனை படங்களில் பட்டியலில் சேரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல வருடங்களுக்கு முன் ஜுராசிக் பார்க் படத்தை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் எடுக்கப்பட்ட படம்  - ஜுராசிக் வேர்ல்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் எடுக்கப்பட்ட படம்  என்பதால் ஜுராசிக் வேர்ல்டு படத்திற்கு உலகம் முழுக்கவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதை படமும் ஏமாற்றவில்லை. மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் சாதனையும் செய்து வருகிறது. ஜுராசிக் வேர்ல்டு படத்தின் வசூல் சாதனை அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.  இப்படத்தின் முதல் 4 நாட்கள் வசூல் மட்டுமே 1310 கோடி ரூபாய் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  இதுவரை வெளிவந்த அனைத்துப் படங்களிலும் உலகளவில் 2ஆவது அதிகபட்ச முதல் வார வசூல் இதுதானாம்.  

2012ஆம் ஆண்டு வெளிவந்த அவெஞ்சர்ஸ் திரைப்படம் முதல் வார இறுதியில் 1330 கோடி ரூபாய் வசூல் செய்தததே இதுவரை அதிகபட்ச சாதனையாக உள்ளது.  ஜுராசிக் வேர்ல்டு படத்தின் பட்ஜெட்  960 கோடி ரூபாய். அதை 3ஆவது நாளே திரும்ப எடுத்துவிட்டது. ஜுராசிக் வேர்ல்டு திரைப்படம் 4 நாட்களில் மட்டுமே இவ்வளவு பெரிய தொகையை வசூலித்துள்ளதால், இன்னும் வசூலில் பல சாதனைகளை படைக்கும் என பாக்ஸ் ஆபிஸ் ஆர்வலர்கள் கருதுகிறார்கள். 


Post your comment





Related News
உலகளவில் அடித்து நொறுக்கிய வசூல்! விசயம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்
உலகம் முழுவதும் பாகுபலி படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா- அதிர்ந்த திரையுலகம்
வேர்ல்டு ஹீரோ, நடிகை ஜோடியை பிரித்தது யார் தெரியுமா?
இன்று உலகம் முழுவதும் 1000 அரங்குகளுக்கு மேல் பைரவா ரிலீஸ்!
உலகளவில் தோனியின் பிரம்மாண்ட வசூல் எவ்வளவு தெரியுமா?
உலக திரைப்பட விழாவில் பங்கேற்கும் சூர்யா படம்
உலகம் முழுவதிலும் வசூலில் தனி வரலாறு படைத்த கபாலி!
87 ஆண்டுகளுக்கு முந்தைய டிஸ்னி திரைப்படம் கண்டுபிடிப்பு
தமிழ்ப் படங்களை மிஞ்சும் ஜுராசிக் வேர்ல்டு!
பள்ளி குழந்தைகளுக்கு உலக இசை சினிமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions