தமிழ்ப் படங்களை மிஞ்சும் ஜுராசிக் வேர்ல்டு!

Bookmark and Share

தமிழ்ப் படங்களை மிஞ்சும் ஜுராசிக் வேர்ல்டு!

தமிழ்த் திரையுலகில் தமிழ்ப் படங்களுக்கு வரவேற்பே இல்லை என்று ஒரு சிலர் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் அத்தனை படங்களும் நல்ல படங்களாக இருந்தால் கண்டிப்பாக வரவேற்பு இருக்கும். ஆனால், பெரும்பாலான படங்களை எதற்கு எடுக்கிறார்கள் என்று தெரியாத அளவிற்கே இருக்கிறது. நல்ல படங்கள் வந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் வரவேற்பார்கள், வசூலும் குவியும் என்பதை சமீபத்தில் வந்த காக்கா முட்டை படம் நிரூபித்திருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பல ஊர்களில் அந்தப் படம் நல்ல வசூலைக் குவித்திருக்கிறது.

இதனிடையே ஹாலிவுட் படமான ஜுராசிக் வேர்ல்டு படம் தமிழ்நாட்டிலும் பலமான வசூலைக் குவித்து வருகிறது. கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தப் படத்திற்கு எந்தத் திரையரங்கிலும் டிக்கெட்டே காலியாக இல்லை. ஆன்லைனிலேயே 90 சதவீதத்திற்கும் மேலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை படம் பார்க்கலாம் என முந்தின நாள் சனிக்கிழமை சென்னையில் உள்ள ஒவ்வொரு திரையரங்கின் ஆன்லைன் புக்கிங்கில் பார்த்த நமது நண்பர் ஒரு திரையரங்கில் கூட டிக்கெட்டே இல்லை என்ற தகவலைத் தெரிவிக்கிறார். சில திரையரங்குகளுக்கு அவர் நேரடியாகச் சென்றாராம். வார நாட்களில் மட்டுமே டிக்கெட்டுகள் இருப்பதாகத்  தெரிவித்ததாகச் சொல்கிறார்.

ஜுராசிக் வேர்ல்டு பிரம்மாண்டமான ஆங்கிலப் படம்தான். பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள படம்தான், ஆனாலும் ரசிகர்களை ஈர்க்கும் சக்தி அந்தப் படத்திற்கு இருக்கிறது. தியேட்டர்களுக்கு மக்கள் வரவேயில்லை என்ற குற்றச்சாட்டை இந்தப் படம் உடைத்திருக்கிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்குப் படங்கள் வரும் போது அந்தப் படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு என்பதை ஒரு கோடிக்கும் குறைவாகத் தயாரிக்கப்பட்டு வெளிவந்த காக்கா முட்டையும், பல நூறு கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ஜுராசிக் வேர்ல்டு படமும் புரிய வைத்துள்ளது. அப்படியென்றால் குறை எங்குள்ளது....?


Post your comment





Related News
உலகளவில் அடித்து நொறுக்கிய வசூல்! விசயம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்
உலகம் முழுவதும் பாகுபலி படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா- அதிர்ந்த திரையுலகம்
வேர்ல்டு ஹீரோ, நடிகை ஜோடியை பிரித்தது யார் தெரியுமா?
இன்று உலகம் முழுவதும் 1000 அரங்குகளுக்கு மேல் பைரவா ரிலீஸ்!
உலகளவில் தோனியின் பிரம்மாண்ட வசூல் எவ்வளவு தெரியுமா?
உலக திரைப்பட விழாவில் பங்கேற்கும் சூர்யா படம்
உலகம் முழுவதிலும் வசூலில் தனி வரலாறு படைத்த கபாலி!
87 ஆண்டுகளுக்கு முந்தைய டிஸ்னி திரைப்படம் கண்டுபிடிப்பு
ஜுராசிக் வேர்ல்டு படத்தின் உலக வசூல் சாதனை
பள்ளி குழந்தைகளுக்கு உலக இசை சினிமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions