பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபரைக் கைது செய்ய தயாராகும் அர்ஜென்டினா போலீஸ்

Bookmark and Share

பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபரைக் கைது செய்ய தயாராகும் அர்ஜென்டினா போலீஸ்

பாப் இசை உலகின் பிரபல பாடகரான ஜஸ்டின் பீபரைக் கைது செய்ய அர்ஜென்டினா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் உள்ள இரவு விடுதி ஒன்றில் வைத்து டியாகோ பிசோ என்ற போட்டோ கிராபரை தாக்கும்படி ஜஸ்டின் பீபர் தனது பாதுகாவலர்களிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு அர்ஜென்டினா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும், பாடகர் ஜஸ்டினும் அவரது பாதுகாவலர்களும் இதுவரை ஒரு முறை கூட ஆஜராகவில்லை.

இந்நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜஸ்டின் பீபர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் ஹுயூகோ அல்சிடிஸ் ஹெஸ்னி, டெர்ரன்ஸ் ரெச்சி சுமால்ஸ் ஆகியோரை உடனடியாக கைது செய்து காவலில் வைக்குமாறு அர்ஜென்டினா நீதிமன்ற நீதிபதி ஆல்பர்டோ கைது வாரண்ட் பிறப்பித்துள்ளார்.

அந்நாட்டு சட்டத்தின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜஸ்டினுக்கு ஒரு மாதம் முதல் 6 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
தெலுங்கில் அறிமுகமாகும் இசை அமைப்பாளர் ஜஸ்டின்!
நீங்க வாங்க சார் தமிழகத்துக்கு- கனடா பிரதமரை அழைத்த முன்னணி இயக்குனர், வேறு யாரும் அழைக்கவில்லை
ஹெலிகாப்டர் தந்தால் தான் வருவேன்! அடம்பிடித்த பாடகர்
இந்தியா வருகிறாரா பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்
ஆரம்பத்திலிருந்து தன் மீது முழு நம்பிக்கை வைத்தவர் விஜய் சேதுபதி : ஜஸ்டின் பிரபாகரன் பேட்டி
5 பெண்களை மணந்து ஏமாற்றிய இயக்குனர் கைது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions