பிரபாஸை பார்த்து செத்துட்டேன்: இப்படியும் ட்வீட்டிய பேட்மிண்டன் வீராங்கனை

Bookmark and Share

பிரபாஸை பார்த்து செத்துட்டேன்: இப்படியும் ட்வீட்டிய பேட்மிண்டன் வீராங்கனை

ஹைதராபாத்: பாகுபலி 2 படத்தை பார்த்த பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1,500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

ரூ. 1,500 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் பாகுபலி 2.பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டா பாகுபலி 2 படம் பார்த்துவிட்டு தனது கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்துள்ளது. பாகுபலியாக நடித்த பிரபாஸை பார்த்து செத்துட்டேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஜுவாலா.

பாகுபலியை பார்த்துவிட்டு பிரபாஸுக்கு ஏகப்பட்ட ரசிகைகள் கிடைத்துள்ளனர்.பாகுபலி படத்தில் நடித்தபோது பிரபாஸிடம் 6 ஆயிரம் பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தினர். இந்நிலையில் படத்தை பார்த்த ஜுவாலா பிரபாஸுக்கு அன்பை தெரிவித்துள்ளார்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions