லாரன்ஸ் இயக்கத்தில் நடிக்கும் ஜோதிகா?

Bookmark and Share

லாரன்ஸ் இயக்கத்தில் நடிக்கும் ஜோதிகா?

லாரன்ஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா 2’ மாபெரும் வெற்றி பெற்றது. பேய் படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லாரன்ஸ் ‘நாகா’ என்னும் படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். இப்படத்தை வேந்தர் மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படமும் ‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா 2’ ஆகிய படங்களின் வரிசையில் ‘நாகா’, ‘நாகா 2’ உள்ளிட்ட பல பாகங்களாக எடுக்க இருக்கிறார் லாரன்ஸ். பேய் படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் பேயாக ஜோதிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதையை லாரன்ஸ், ஜோதிகாவிடம் கூறியதாகவும், கதையை கேட்ட ஜோதிகா நடிக்க சம்மதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜோதிகாவின் நடிப்பில் ‘36 வயதினிலே’ படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று ஜோதிகா கூறியிருந்தார். இதன் காரணமாக லாரன்ஸ் படத்தில் நடிக்க சம்மதித்திருப்பதாக கூறுகிறார்கள்.


Post your comment





Related News
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
காற்றின் மொழி எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் - வித்தார்த்
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்
ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
மெகா ஹிட் படத்தின் ரி-மேக்கில் ஜோதிகா - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்
ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions