ஓவர் ஆக்ஷன் தான் செய்திருக்கிறேன்; இயல்பாக நடிக்கவிடவில்லை: ஜோதிகா வருத்தம்

Bookmark and Share

ஓவர் ஆக்ஷன் தான் செய்திருக்கிறேன்; இயல்பாக நடிக்கவிடவில்லை: ஜோதிகா வருத்தம்

இத்தனை படங்களில் ஜோதிகா நடித்து புகழ்பெற்று இருந்தாலும் தான் மிகை நடிப்பு நடித்துள்ளதை அதாவது ஓவர் ஆக்ஷன் செய்துள்ளதை அவரே ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஒரு  பேட்டியில் அவர் இது பற்றி மனம் திறந்திருக்கிறார் மொழி ,36 வயதினிலே போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நான் யதார்த்தமாக நடித்திருப்பதாக நினைக்கிறேன்.

மற்றவை எல்லாமே மிகை நடிப்புதான், ஓவர் ஆக்ஷன்தான். சந்திரமுகி யில் நன்றாக நடித்திருப்பதாக பலரும் பாராட்டுகிறார்கள். ஆனாலும் அதுவும் ஓவர் ஆக்ஷன்தான்.

நான் முன்பெல்லாம் நடித்து முடித்த படங்களைப் பார்க்கிறபோது இது ஓவராக இருக்கிறதே என்று தோன்றும். எனக்கே என்னைப் பிடிக்காது. அடுத்த படத்திலிருந்து யதார்த்தமாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்வேன்.

படப்பிடிப்பில் அடக்கி வாசிக்க நினைத்து சற்று குறைத்து நடிக்க தொடங்குவேன். டைரக்டர் கவலைப்படுவார். ஏன் டல்லா இருக்கீங்க, மேடம் என்னாச்சு உடம்பு ஏதும் சரியில்லையா. என்ன பிரச்சினை? என்பார்கள். உற்சாகமாக கொஞ்சம் அழுத்தமாக நடியுங்கள் என்பார்கள்.

இப்படி அவர்கள் ஒவராக நடிக்க வைத்து விடுவார்கள். இப்படி நான் மாற நினைத்தாலும் விட மாட்டார்கள். என்னைக் கடைசிவரை இயல்பாக நடிக்கவே விடவில்லை. என்று  ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார் ஜோதிகா.


Post your comment





Related News
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
காற்றின் மொழி எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் - வித்தார்த்
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்
ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
மெகா ஹிட் படத்தின் ரி-மேக்கில் ஜோதிகா - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்
ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions