சக நடிகர், நடிகைகளின் நடிப்பை ரசித்த ஜோதிகா!

Bookmark and Share

சக நடிகர், நடிகைகளின் நடிப்பை ரசித்த ஜோதிகா!

8 வருடங்களுக்குப்பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்துள்ள ஜோதிகா, அந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கிறார். அதோடு, கடந்த 7 வருடங்களாக குடும்பம், குழந்தைகள் என்று சினிமாவுக்கு துளியும் தொடர்பில்லாமல் முழு நேர இல்லத்தரசியாக வாழ்ந்து வந்த ஜோதிகா, இந்த படத்தில் நடித்தபோதும் நடிகை என்கிற எந்தவித சாயலும் இல்லாத அளவுக்கு ஒரு குடும்ப பெண்ணாகவே ஸ்பாட்டிற்கு வந்திருக்கிறார்.

மேலும், தன்னுடன் நடித்த நடிகர் நடிகைகளின் நடிப்பை உன்னிப்பாக கவனித்த ஜோதிகா, அவர்கள் சிறப்பாக நடிக்கிறபோது கைதட்டி ஆரவாரமும் செய்திருக்கிறார். இன்னும் சிலரை உங்கள் நடிப்பு பிரமாதமாக இருந்தது என்று மனதார வாழ்த்தினாராம் ஜோதிகா.

அவரிடமிருந்து இந்த பாராட்டுக்களை எதிர்பார்க்காத சக நடிகர்கள் அசந்து போனார்களாம். அதனால், 36 வயதினிலே படத்தில் நடித்த அனைவரும் ஜோதிகா கொடுத்த இந்த உற்சாகத்தினால் அதிக ஈடுபாடு காட்டி இயல்பாக நடித்தார்களாம்.

இப்படி நடித்தவர்கள் அனைவரிடமும் ஒரு குடும்பத்தினர் போன்று ஜோதிகா பழகியதால், படப்பிடிப்பு முடிந்து கடைசி நாள் பிரிகிறபோது சிலர் கண்கலங்கி விட்டார்களாம். அந்த அளவுக்கு ஒவ்வொருவரிடமும் ஆத்மார்த்தமான அன்போடு பழகினாராம் ஜோதிகா.


Post your comment





Related News
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
காற்றின் மொழி எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் - வித்தார்த்
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்
ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
மெகா ஹிட் படத்தின் ரி-மேக்கில் ஜோதிகா - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்
ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions