'எக்ஸ்பிரஷன் குயின்' ஜோதிகா...!

Bookmark and Share

'எக்ஸ்பிரஷன் குயின்' ஜோதிகா...!

சூர்யாவின் காதல் மனைவியான ஜோதிகா மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்பது பழைய செய்தி. ஆனால், அவர் நடித்துள்ள '36 வயதினிலே' படத்தின் டீசரைப் பார்த்ததுமே பலரும் ஆச்சரியப்பட்டுள்ளார்கள் என்பதுதான் புதிய செய்தி.

பொதுவாக ஒரு படத்தின் டீசரையோ, டிரைலரையோ யு டியூபில் வெளியிடும் போது, 'கமெண்ட்' பக்கங்களை தடை செய்துவிடுவார்கள். ஆனால், இந்த டீசருக்காக அப்படி எதுவும் செய்யவில்லை.

சரியாக ஒரு நிமிடம் உள்ள இந்த டீசர் முழுவதுமே ஜோதிகாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. டீசர் முழுவதிலும் புடவை மட்டுமே அணிந்து நடித்துள்ள ஜோதிகாவின் தோற்றம் மிகவும் மெச்சூரிட்டியாகவும், பாந்தமாகவும் அமைந்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட டீசர் ஒரு இரவிற்குள்ளாகவே ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.  திருமணத்திற்குப் பின் பொதுவாக ஹீரோயின்கள் அம்மா, அண்ணி, அக்கா ஆகிய கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் வழக்கம்.

ஆனால், ஜோதிகா அப்படி எந்தத் தவறையும் செய்யாமல்  அவருக்குப் பொருத்தமான ஒரு கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களிலும் ஜோதிகாவைப் பாராட்டி வருகிறார்கள். அதில் பலரும் பலவிதமாகப் பாராட்டியிருக்க 'எக்ஸ்பிரஷன் குயின்' என்ற அடைமொழிதான் நம்மை அதிகம் கவர்ந்தது.

சும்மாவா, ஹீரோயினாக நடித்த காலத்தில் ஒரு நிமிடத்திற்கு ஒன்பது எக்ஸ்பிரஷன் கொடுப்பாரே...ரசிகர்கள் இன்னும் ஜோதிகாவை மறக்கவில்லை...என்பது மட்டும் இதிலிருந்து புரிகிறது.


Post your comment





Related News
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
காற்றின் மொழி எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் - வித்தார்த்
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்
ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
மெகா ஹிட் படத்தின் ரி-மேக்கில் ஜோதிகா - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்
ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions