கேரளாவிலும் ஜோதிகாவிற்கு வரவேற்பு!

Bookmark and Share

கேரளாவிலும் ஜோதிகாவிற்கு வரவேற்பு!

கடந்த ஆண்டு மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்து வெளியான படம் ஹவ் ஓல்டு ஆர் யூ. இந்த படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியிருந்தார். அப்படத்துக்கு கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

மஞ்சு வாரியரின் ரீ-என்ட்ரிக்கு அப்படம் பெரிய அடித்தளம் போட்டுக்கொடுத்தது. அதனால், அதே படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்தால் தனது ரீ-என்ட்ரியும் பெரிய திருப்புமுனையாக அமையும் என்றுதான் ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் ரீமேக்கான 36 வயதினிலே படத்தில் நடித்தார் ஜோதிகா.

வேறு டைரக்டர்கள் இயக்கினால் கதையை மாற்றி விடுவார்கள் என்பதால் அந்த படத்தை இயக்கிய ரோஷனையை தமிழிலும் இயக்க வைத்தனர். தற்போது படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

நீண்ட நாளைக்கு பிறகு ஜோதிகா நடித்துள்ள படம் என்பதால் அவரை பார்க்கவே ஒரு கூட்டம் தியேட்டர்களுக்கு வந்து கொண்டிருக்கிறது.

அதேபோல், மலையாளத்தில் ஏற்கனவே வெளியான படமே தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது என்றாலும், இப்படத்தை பார்க்க கேரளாவிலுள்ள தியேட்டர்களிலும் கூட்டம் வருகிறதாம்.

ஆனால், இந்த அளவுக்கு அங்கு வரவேற்பு இருக்கும் என்பதை எதிர்பார்க்காததால் குறைவான தியேட்டர்களிலேயே 36 வயதினிலே வெளியாகியிருக்கிறதாம்.


Post your comment





Related News
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
காற்றின் மொழி எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் - வித்தார்த்
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்
ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
மெகா ஹிட் படத்தின் ரி-மேக்கில் ஜோதிகா - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்
ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions