குமாஸ்தா வசந்தியாக நடிக்கும் ஜோதிகா!

Bookmark and Share

குமாஸ்தா வசந்தியாக நடிக்கும் ஜோதிகா!

மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்து வெளியான ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் தமிழ் ரீமேக்கான 36 வயதினிலே படத்தில் நடித்து முடித்து விட்டார் ஜோதிகா. 2006ல் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, அந்த வருடத்தில் மட்டும் சரவணா, ஷாக், வேட்டையாடு விளையாடு, ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்தவர், அதற்கடுத்தும் சில படங்களை முடித்துக்கொடுத்து விட்டு, சீதா கல்யாணம் என்ற மலையாள படத்தோடு நடிப்பை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில், 6 ஆண்டுகள் கழித்து தற்போது 36 வயதினிலே படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. இந்த படம் மலையாள படத்தின் ரீமேக் என்றபோதும், கதையில் சில திருத்தம் செய்துள்ளனர்.

அதாவது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்க, சொந்த ஊரில் உள்ள ஒரு அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை செய்யும் வசந்தி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் ஜோதிகா.

புடவை காஸ்டியூமில் ஒரு பேக்கை தோளில் போட்டுக்கொண்டு ஒரு சராசரி குடும்பப் பெண்ணாக நடித்துள்ள ஜோதிகா, தனது வேலையில் தனித்திறமையை காண்பித்து கடைசியில் கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஜனாதிபதியின் கையினால் விருது வாங்குவது போன்ற வேடத்தில் நடித்திருக்கிறார்.

அவர் விருது வாங்க செல்லும் காட்சிகளை டெல்லிக்கு சென்றே படமாக்கியிருக்கிறார்களாம். மேலும், சினிமாவில் எத்தனையோ விதமான கேரக்டர்களில் நடித்துள்ள ஜோதிகா, இந்த படத்தில் இதுவரையில்லாத ஒரு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருககிறாராம். அதனால் கதைப்படி விருது வாங்குவது போன்று நடித்துள்ள ஜோதிகாவின் நடிப்புக்கு நிஜத்திலும் விருது கிடைக்கும் என்கிறார்கள்.


Post your comment





Related News
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
காற்றின் மொழி எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் - வித்தார்த்
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்
ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
மெகா ஹிட் படத்தின் ரி-மேக்கில் ஜோதிகா - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்
ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions