டிவிக்களுக்குப் பேட்டி கொடுக்கும் ஜோதிகா

Bookmark and Share

டிவிக்களுக்குப் பேட்டி கொடுக்கும் ஜோதிகா

தமிழ்த் திரையுலகில் 2000க்கு முன் முன்னணி நடிகைகளில் முக்கியமானவராக இருந்தவர் ஜோதிகா. சிம்ரனுக்கும் அவருக்கும்தான் அப்போது பலத்த போட்டி இருக்கும். ஜோதிகா நடித்த பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஜோதிகா நடித்துள்ளார். ஆனால், அவர் அப்போதெல்லாம் மீடியாக்களுடன் சகஜமாகப் பழகாமல் தள்ளியே இருப்பார். பத்திரிகையாளர்களும் அவரை எளிதில் அணுக முடியாது.

அதற்குக் காரணம் அவருடைய மானேஜர் என அப்போதே பல பத்திரிகையாளர்கள் குறைபட்டுக் கொள்வார்கள். எந்த ஒரு டிவிக்கும் ஜோதிகா பேட்டி கொடுக்க மாட்டார். மீடியாக்கள் தன்னை நெருங்காமல் ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதற்குள்ளேயே இருந்தார்.

இப்போது காலம் மாறிவிட்டது, ஒரு படத்தை ஓட வைப்பதற்கு மீடியாக்களின் துணையும் அதிகம் தேவைப்படுகிறது. அந்த மாற்றம் ஜோதிகவிடமும் இப்போது வந்துவிட்டது.

திருமணத்திற்குப் பிறகு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது '36 வயதினிலே' படத்தில் நாயகியாக ஜோதிகா நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீடு நடந்த போது சரளமான தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் ஜோதிகா.

இவர் இவ்வளவு அழகாக தமிழ் பேசுவாரா என்று பலரும் அப்போது ஆச்சரியப்பட்டார்கள். '36 வயதினிலே' படம் விரைவில் வெளிவர உள்ளதால், இப்போதே படத்திற்கான பிரமோஷன் வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள்.

அதிகமாக டிவிக்களுக்குப் பேட்டி கொடுக்காத ஜோதிகா இப்போது அதையும் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஆனால், குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகளுக்கு, மட்டும்தான் பேட்டி தருகிறார் என்று சிலர் குறைபட்டுக் கொள்கிறார்கள்.

எப்படியோ காலம் எல்லாரிடமும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து விடுகிறது, அதற்கு ஜோதிகாவும் விதிவிலக்கல்ல.

 


Post your comment





Related News
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
காற்றின் மொழி எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் - வித்தார்த்
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்
ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
மெகா ஹிட் படத்தின் ரி-மேக்கில் ஜோதிகா - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்
ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions