நடிகைகள் பேச மறுக்கும் தமிழ்

Bookmark and Share

நடிகைகள் பேச மறுக்கும் தமிழ்

சினிமாவில் நடிக்க ஒருகாலத்தில் பாட்டு பாடத் தெரியவேண்டும். இப்போது அதெல்லாம் கிடையாது. தமிழ் பேசக் கூட தெரிய வேண்டாம். தமிழ் என்ற ஒன்று கூட தெரிய வேண்டாம். தமிழ் பேசித்தான் நடிக்க வேண்டும் என்றால்இன்று யாராலும் நடிக்க முடியாது. குறிப்பாக நடிகைகள் யாராலும் நடிக்க முடியாது.

எல்லாருக்கும் பெரும்பாலும் இரவல் குரல்தான். குரலும் கொடுப்பதில்லை. தமிழ் வசனங்களையாவது ஒரு டம்மி வசனம் போல பேசி நடிக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.  

பேசாமலேயே பல கோடி சம்பாதித்துக் கொண்டு மும்பை சென்று விடுகிறார்கள். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்த போது தமிழே தெரியாது வசனத்தை தமிழில் இருப்பதை ஹிந்தியில், ஆங்கிலத்தில் எழுதியாவது பேசினாரா என்றால் அதுவும் இல்லை. ப்ராம்ட்டிங் என்கிற முறையில் முதலில் உதவி இயக்குநர் கத்திப் பேசுவதை திரும்ப உள்வாங்கி உடனே பேசி நடித்தாரா என்றால்அதுவும் இல்லை.

தமிழ் வசனத்துக்கு ஏற்ப ஏதாவது ஆங்கிலத்தில் பேசி அதாவது உதாரணத்துக்கு வேலை இல்லையா உனக்கு என்பதற்குப் பதிலாக வேர் ஆர்யூ கோயிங் நவ் என்று ஏறக்குறைய உதட்டசைவு வரும்படி ஆங்கிலத்தில் பேசி நடித்தாராம்.

இது இன்றும் தொடர்கிறது. பாயும்புலி படத்தில் காஜல் அகர்வால் நடித்த போது தனக்கு ப்ராம்ப்டிங் வேண்டும் என்றாராம். இயக்குநர் சுசீந்திரன் மறுத்து விட்டாராம். என் உதவி இயக்குநர் ப்ராம்ப்டிங் செய்ய மாட்டார்.

எந்த மொழியிலாவது எழுதிவிட்டு சொல்லலாம். வசனத்தை நீங்கள்தான் பேசவேண்டும் என்று கறாராகக் கூறி அப்படியே பேச வைத்தாராம். தமிழே பேசாத காஜல் அகர்வால் போன்ற பலர் இன்று தமிழில் முன்னணி நடிகைகளாக உள்ளனர்.


Post your comment





Related News
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
காற்றின் மொழி எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் - வித்தார்த்
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்
ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
மெகா ஹிட் படத்தின் ரி-மேக்கில் ஜோதிகா - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்
ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions