புதிய கதைகள் கேட்கும் ஜோதிகா!

Bookmark and Share

புதிய கதைகள் கேட்கும் ஜோதிகா!

மொழி படத்தில் மாற்றுத்திறனாளி ரோலில் அற்புதமாக நடித்த ஜோதிகாவுக்கு 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகை விருது கிடைத்தது. அதையடுத்து தமிழில் மணிகண்டா, மலையாளத்தில் சீதா கல்யாணம் படங்களில் நடித்த ஜோதிகா, அதோடு சூர்யாவை கல்யாணம் செய்து கொண்டு நடிப்புக்கு டாட்டா காட்டினார்.

ஆனபோதும், அவருக்குள் இருந்த நடிப்புத்தாகம் அடங்காததால் அவ்வப்போது தனது விருப்பத்தை சூர்யாவிடம் சொல்லி வந்தவரை, மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான ஹவ் ஓல்டு ஆர் யு படம் வெகுவாக பாதித்து விட அந்த படத்தில் நடித்தே தீருவது என்ற தனது ஆசையை கூறினார்.

அதையடுத்து, மனைவியின் ஆசையை நிறைவேற்ற அதே படத்தை தமிழில் 36 வயதினிலே என்ற பெயரில் தானே தற்போது தயாரித்துள்ளார் சூர்யா. படமும் ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில், அப்படத்தில் டைட்டீல் பாடலாக இடம்பெற்றிருந்த வாடி ராசாத்தி என்ற பாடலை தற்போது ப்ரமோஷனுக்காகவும் தயார் செய்துள்ளனர்.

ஆக, வெள்ளித்திரையில் முகம் காட்டுவதற்கு முன்பே சேனல்களில் முகம் காட்டப்போகிறார் ஜோதிகா. மேலும், தொடர்ந்து சினிமாவில் நடிப்பது என்ற முடிவில் இருப்பதால், தற்போது சில டைரக்டர்களிடம் சீரியசாக கதை கேட்கவும் தொடங்கி விட்ட ஜோதிகா, 36 வயதினிலே ரிலீசானதும் தனது அடுத்த படத்திற்காக மீண்டும் அரிதாரம் பூசுகிறாராம்.


Post your comment





Related News
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
ஜோதிகாவை மாற்றிய 36 வயதினிலே படம்!
வாடி ராசாத்தி மூலம் புகழ்பெற்ற நீதிபதி மகன்
தெலுங்குக்குப் போகும் \'36 வயதினிலே\'
என்னுள் இருந்த நெருப்பு...! 36 வயதினிலே ஜோதிகா!
\'36 வயதினிலே\' வெற்றியைக் கொண்டாடிய சூர்யா, ஜோதிகா
36 வயதினிலே போன்ற முயற்சி தொடரும் - சூர்யா!
ராசாத்தியால் புகழ்பெற்ற பள்ளி ஆசிரியை
8 வருடங்களுக்குப் பிறகு ஜோதிகாவின் ரீ-என்ட்ரி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions