என்னுள் இருந்த நெருப்பு...! 36 வயதினிலே ஜோதிகா!

Bookmark and Share

என்னுள் இருந்த நெருப்பு...! 36 வயதினிலே ஜோதிகா!

சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டுப்போன ஜோதிகா, சுமார் 8 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

2டி எண்டர்டெயிமெண்ட் பட நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்த இப்படம் மலையாளத்தில் ரிலீசாகி வசூலை வாரிக் குவித்த ஹை ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமேக் என்பது உலகத்துக்கு தெரிந்த விஷயம்தான்.

மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய ரோஸன் ஆண்ட்ரூஸ்தான் தமிழிலும் இயக்கியிருந்தார். ஜோதிகா மீண்டும் நடித்துள்ள படம் என்பதால் 36 வயதினிலே படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால்.... ஆண்களைவிட பெண்கள் மத்தியில்தான் 36 வயதினிலே படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு. ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகச்சரியாய் பூர்த்தி செய்திருக்கிறது 36 வயதினிலே.

அதனால் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய மறுபிரவேசத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்ததைப் பார்த்து நெகிழ்ந்து போயிருக்கிறார் ஜோதிகா.

அது மட்டுமல்ல, தன் கணவர் சூர்யாவின் ட்விட்டர் மூலமாக தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். '36 வயதினிலே' படத்துக்கு நீங்கள் காட்டிய அன்பும், மரியாதையும் என்னை நெகிழ வைத்துள்ளது.

இந்தப்படம் எனக்கு மட்டுமல்ல, சூர்யா, இயக்குநர் ரோஷன் என அனைவருக்கும் மறக்க முடியாது வரவேற்பை அளித்துள்ளது. இப்பட வாய்ப்பு என் கதவுகளை தட்டியபோது அதை நான் வரவேற்று ஏற்றுக் கொண்டேன்.

அதற்குக் காரணம் இல்லத்தரசிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும், அவர்கள் பல்வேறு பணிகளை ஒரு சேர செய்கின்றனர் என்ற நெருப்பு என்னுள் எப்போதுமே இருந்தது. அதன் காரணமாகவே, நான் இப்படத்தில் நடித்தேன்.

ஆணாதிக்கம் மிகுந்த திரைத்துறையில் கதாநாயகிகளுக்கு சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் சுயமரியாதை, நம்பிக்கை, சாதனை எல்லாம் அவள் திருமண பந்தத்தால் ஏற்படும் அந்தஸ்தில் மட்டும் இல்லை.

மாறாக அவள் அவளது கனவுகளை எப்படி மெய்ப்பட வைக்கிறாள் என்பதிலேயே உள்ளது. '36 வயதினிலே' திரைப்படத்துக்கு நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவால் நான் இன்று பெருமிதம் கொள்கிறேன்.

எனக்கு ஆதரவு அளித்த நீங்கள் அனைவரும் மகளிர் மேம்பாட்டுக்கு வித்திடும், நிறைய வசந்திகள் தங்கள் கனவுகளை கைப்பற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று சூர்யாவின் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் ஜோதிகா.

பெண் சுயமாக நிற்க வேண்டும், ஜெயிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் 36 வயதினிலே படத்தில் நடித்த ஜோதிகா, தன் கணவரின் ட்விட்டரில் தன் கருத்தை பதிவு செய்ததால் 36 வயதினிலே எதிர்மறையான,  சராசரியான பெண்ணாகவே காட்சியளிக்கிறார் ஜோதிகா.

 


Post your comment

Related News
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
ஜோதிகாவை மாற்றிய 36 வயதினிலே படம்!
வாடி ராசாத்தி மூலம் புகழ்பெற்ற நீதிபதி மகன்
தெலுங்குக்குப் போகும் \'36 வயதினிலே\'
\'36 வயதினிலே\' வெற்றியைக் கொண்டாடிய சூர்யா, ஜோதிகா
36 வயதினிலே போன்ற முயற்சி தொடரும் - சூர்யா!
ராசாத்தியால் புகழ்பெற்ற பள்ளி ஆசிரியை
8 வருடங்களுக்குப் பிறகு ஜோதிகாவின் ரீ-என்ட்ரி!
புதிய கதைகள் கேட்கும் ஜோதிகா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions