பெண்களை தியேட்டருக்கு இழுக்கும் ஜோதிகா!

Bookmark and Share

பெண்களை தியேட்டருக்கு இழுக்கும் ஜோதிகா!

மொழி படத்தில் நடித்து விட்டு திருமணத்திற்கு ஜோதிகா தயாரானபோது, ஒரு நல்ல நடிகையை திரையுலகம் இழக்கப்போகிறது என்கிற வருத்தம் பல படைப்பாளிகளுக்கு இருந்தது.

ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக இல்லறத்தில் ஈடுபட்டு வந்த ஜோதிகா இப்போது 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து தனது செகண்ட் இன்னிங்சை அமோகமாக ஆரம்பித்திருக்கிறார்.

இது பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதோடு, இந்த படத்தில் கணவன்மார்களால் கட்டுப்படுத்தப்படும் பெண்களுக்காகவும் அவர் பல இடங்களில் அதிரடியான வசனங்களையும் பேசி நடித்திருக்கிறாராம்.

அதாவது, பெண்களின் திறமை பல சமயங்களில் ஆண்களால் கட்டிப் போடப்படுகிறது. மேலும், படித்த படிப்புக்கேற்ற வேலையை அவர்களை செய்ய விடாமல் தடுப்பதோடு, அவர்களது தனிப்பட்ட ஒவ்வொரு ஆசைகளுக்கும் ஆண்கள் தடை விதித்து வருவதை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறாராம்.

அதனால், இந்த படத்துக்கு ஆணாதிக்கத்தினால் அடக்கப்பட்டிருக்கும் பெண்கள் பெரிய வரவேற்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். மேலும், நிஜ வாழ்க்கையில் தனது கணவர் சூர்யா, ஜோதிகாவின் ஆசாபாசங்களுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாரோ அதேபோல்தான் படத்தில் அவருக்கு கணவரான நடித்துள்ள ரகுமானும் ஜோதிகாவின் சுதந்திரத்தில் தலையிடாத கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.

அதனால் இந்த 36 வயதினிலே படம் பெண்களுக்கு பிடித்தமான படமாகி, சமீபகாலமாக தியேட்டர்கள் பக்கம் வராமல் இருக்கும் பெருவாரியான பெண்களை தியேட்டர்களுக்கு இழுத்து வரும் என்கிறார்கள்.

 


Post your comment





Related News
என்னுள் இருந்த நெருப்பு...! 36 வயதினிலே ஜோதிகா!
புதிய கதைகள் கேட்கும் ஜோதிகா!
36 வயதினிலே கதை இதுதான்
36 வயதினிலே இசை வெளியீடு : உங்களுக்காக காத்திருக்கிறேன் – சூர்யா
ஏப்ரல் 6 அன்று வெளியாகிறது 36 வயதினிலே இசை
\'36 வயதினிலே\' படத்திலிருந்து முதலில் வருகிறது ராசாத்தி
மே மாதம் 36 வயதினிலே ரிலீஸ்!
ஜோதிகா நடிக்கும் ’36 வயதினிலே’
ஹவ் ஓல்ட் ஆர் யூ... தமிழில் ‘36 வயதினிலே’ எனப் பதில் சொல்கிறார் ஜோ?
16 வயதினிலே டிஜிட்டல் தாமதமாவதன் காரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions