ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா

Bookmark and Share

ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா

நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயான பின்பு மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் தனது சினிமா பிரவேசத்தை தொடங்கினார். இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஜோதிகா நடிப்பில் ‘நாச்சியார்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் அவர் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்தநிலையில் வித்யா பாலன் நடித்துள்ள ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணான வித்யா பாலனின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் கதையாகும்.

வித்தியாபாலன் நடித்துள்ள வேடத்தில் ஜோதிகா நடிப்பார் என்றும் இந்தப் படத்தை ராதா மோகன் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடித்த மொழிபடத்தை இயக்கியவர்.

இதுபற்றி ஜோதிகாவிடம் கேட்டபோது, படத்தயாரிப்பாளர்கள் இதுதொடர்பாக தன்னை அணுகினார்கள். இன்னும் ஒப்பந்தம் முடிவாகவில்லை. வித்யாபாலன் நடித்துள்ள அந்த இந்திப் படத்தை நான் பார்த்தேன். மிக நன்றாக இருக்கிறது. இப்போதைக்கு ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் மார்ச் மாதத்தில் முடிவடைகிறது.

அதன்பிறகு மே அல்லது ஜூன் மாதத்தில் ‘தும்ஹரி சுளு’ படப்பிடிப்பு தொடங்கும் என்றார்.


Post your comment





Related News
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்
ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
மெகா ஹிட் படத்தின் ரி-மேக்கில் ஜோதிகா - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்
ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
நாச்சியாரில் தே வார்த்தை போல் இன்னும் நிறைய பேசி இருக்கணும் - ஜோதிகா ஓபன் டாக்.!
‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions