மனைவிக்காக படம் எடுக்கும் மலையாள இயக்குனர்..!

Bookmark and Share

மனைவிக்காக படம் எடுக்கும் மலையாள இயக்குனர்..!

திருமணம் செய்துகொண்டு எட்டு வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ஜோதிகாவை மீண்டும் திரையுலகில் அவர் விரும்பிய கதையில் விரும்பியபடி நுழைவதற்கு வசதியாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தையே ஆரம்பித்து படம் தயாரித்துள்ளார் நடிகர் சூர்யா.

இதே போலத்தான் மலையாளத்திலும், தனது காதல் மனைவியாகவிட்ட ரீமா கல்லிங்கல்லுக்கு, திருமணத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சூப்பர் என்ட்ரி கொடுக்கும் விதமாக அவரது கணவர் ஆஷிக் அபுவே படத்தை இயக்குகிறார்.

அதாவது இங்கே மனைவிக்காக ஒருவர் படம் தயாரிக்கிறார் என்றால் கேரளாவில் மனைவிக்காக ஒருவர் படம் இயக்குகிறார். ஆக விஷயம் என்னவோ மனைவிக்காக கணவர்கள் எடுக்கும் முயற்சிதான் என்பதுடன் இரண்டுமே பெண்களுக்கான கதைக்களம் என்பதுதான் சிறப்பு.

அந்த வகையில் ஆஷிக் அபு தற்போது இயக்கவுள்ள 'ராணி பத்மினி' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக தனது மனைவியை நடிக்க வைக்கிறார். இன்னொரு கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

இந்தப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஏப்-20ஆம் தேதி இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட இருக்கிறது.


Post your comment





Related News
தாத்தா வயதிலும் ஹீரோவாக நடிக்கிறார்கள்: ரீமா கல்லிங்கல்
அல்போன்ஸ் புத்ரனுக்கு ரீமா கல்லிங்கல் ஆதரவு..!
“மஞ்சு வாரியர் என் படத்துல இருக்காங்கப்பா.. வதந்தியை கிளப்பாதீங்க”..!
போதை பொருள் வழக்கில் என்னை தொடர்புபடுத்துவதா? ரீமாகல்லிங்கல் ஆவேசம்
அரசியலில் நுழைய ஆழம் பார்க்கும் ரீமா கலிங்கல்!
என் அடுத்த படத்தின் ஹீரோயின் என் மனைவிதான்: ரீமா கல்லீங்கல் கணவர்..!
கவர்னரை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய நடிகை ரீமா..!
ந‌டிகை ரீமா கல்லிங்கல் - இயக்குநர் ஆஷிக் அபு ரகசிய திருமணம்!
சிறந்த நடிகர்களாக ப்ருதிவிராஜ், ரீமாவுக்கு கேரள அரசு விருது!
நடிகை ரீமா கல்லிங்கலு மீது இயக்குநர் புகார் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions