
பரமகுரு என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஸ்ரீஜா. அதையடுத்து ஆனந்த மழை படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்துள்ளார். போலியோ நோயின் அட்டாக்கினால் கால் ஊனமுற்ற பெண்ணாக நடித்திருப்பவர், அந்த படத்தில் நடித்த மொத்த 10 நாட்களும் நொண்டி நொண்டி நடந்தபடியே நடித்துள்ளாராம்.
இந்த காட்சியில் எப்படி நடக்க வருமோ அதன்படி நடிக்குமாறு டைரக்டர் சொன்னார். நான் எனக்கு தெரிந்தபடி நடந்து காட்டினேன். அது டைரக்டருக்கு பிடித்து விட அப்படியே நடிக்குமாறு கூறினார் என்று சொல்லும் ஸ்ரீஜா, ஆனால் இந்த படத்தை விட முதல் படமான பரமகுருவில்தான் நான் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன் என்கிறார். அதாவது, ஒரு காட்சியில் எனது மாமா என்னை கெடுத்து விடுவார்.
அதனால் அந்த வேகத்தில் நான் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள செல்வேன். அந்த காட்சியை படமாக்கியபோது, நான் கிணற்றில் குதிக்கும் காட்சியை டூப் வைத்து படமாக்கிக்கொள்ளலாம் என்று டைரக்டர் சொன்னார்.
ஆனால் நான்தான் நீச்சல் தெரியும் என்பதால், நானே நடிக்கிறேன் என்று நடித்தேன். எது செய்தாலும் ரியலா செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் இருப்பதினால்தான் அப்படி நடித்தேன். ஆனால், நான் வெயிட்டான புடவை கட்டியிருந்ததால் என்னால் தண்ணீருக்குள் இருந்த வெளியே வர முடியவில்லை. உள்ளே இழுத்தது. அதனால் தண்ணீருக்குள் மூச்சு பேச்சே இல்லாமல் விழுந்து விட்டேன்.
அதைப்பார்த்து வெளியில் நின்ற 4 பேர் கிணற்றுக்குள் குதித்து என்னை வெளியே தூக்கி வந்தனர். நான் மயக்கத்தில் இருந்து மீள அரை மணி நேரம் ஆனது. அதிலிருந்து இப்போது நான் கிணற்று பக்கம்கூட செல்வதில்லை.
அப்போதுதான் எனக்கு தண்ணியில கண்டம் இருப்பதை நான் அறிந்து கொண்டேன் என்று சொல்லும் ஸ்ரீஜா, அடுத்து, உங்கூட பேசணும் போல இருக்கு என்ற படத்துல செகண்ட் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக சொல்கிறார்.
அவரிடத்தில், கிளாமரில் உங்களது எல்லை எதுவரை? என்று கேட்டதற்கு, நான் நடிக்கும் படங்களை அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
அதனால் ஹோம்லியான வேடங்களுக்கே முதலிடம் கொடுக்கிறேன். அதேசமயம், மாடர்ன் கேரக்டர் என்கிறபோது அளவான கிளாமரை வெளிப்படுத்துவேன். நான் ரோல் மாடலாக நினைப்பது ஜோதிகாவைத்தான்.
அவர் நடித்த குஷி படத்தில் இருந்து அவரது ரசிகையாகி விட்டேன். அவர் எல்லா படங்களிலுமே கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருப்பார். மாடர்ன் கேரக்டர்களில்கூட லிமிட் தாண்டியிருக்க மாட்டார்.
அதோடு துருதுருவென்று இருப்பார் அவர். எந்த இடத்திலும் அவரது டிரஸோ, நடிப்போ அருவருப்பாக இருக்காது. ரசிக்கும்படியாகத்தான் இருக்கும். அதனால் அவரை மாதிரி ஒரு நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக உள்ளது.
அதனால்தான் எப்படியாவது நடித்து வளர வேண்டும் என்றில்லாமல் செலக்டீவான படங்களாக நடித்து சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்து வருகிறேன் என்கிறார் ஸ்ரீஜா.
Post your comment
Related News | |
![]() |