என்னுடைய உலகமே சூர்யா தான் - ஜோதிகா பேச்சு!

Bookmark and Share

என்னுடைய உலகமே சூர்யா தான் - ஜோதிகா பேச்சு!

சென்னையில் நான் சந்தித்த, என்னை கவர்ந்த முதல் ஆண் சூர்யா, என்னுடைய உலகமே சூர்யா தான், அவரை கணவராக அடைந்தது சந்தோஷம்... என்று 36 வயதினிலே ஆடியோ விழாவில் பேசினார் நடிகை ஜோதிகா.

நடிகை ஜோதிகா சுமார் 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு சினிமாவில் ரீ-என்ட்ரியாகியிருக்கும் படம் 36 வயதினிலே. மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் ரீ-மேக் தான் இந்தப்படம். ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது. படத்தின் இசை தட்டை சூர்யா-ஜோதிகாவின் குழந்தைகளான தியாவும், தேவ்வும் வெளியிட்டனர்.

விழாவில் ஜோதிகா பேசும்போது,

என்னைப்பற்றி இங்கு நிறைய பேர் பேசினார்கள். இந்தப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் நடிக்கலாமா... வேண்டாமா...? என்று நிறைய யோசித்தேன். காரணம் குழந்தைகள் எப்படி பார்ப்பது என்ற கவலை இருந்தது.

எனது நண்பர்கள் தான் என்னை ஊக்கப்படுத்தி நடிக்க வைத்தனர். கூடவே என் மாமனார், மாமியாரும் ஆதரவு தந்தனர். என்னைப் பொறுத்தவரை அவர்களை, என் பெற்றோர்களாகத்தான் பார்த்தேன்.

என் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தொடங்கி, அவர்களை வீட்டுக்கு அழைத்து வருவது வரை எல்லவாற்றையும் அவர்கள் தான் பார்த்து கொண்டார்கள். எல்லாவற்றுக்கு மேலாக என் கணவர் எனக்கு முழு உறுதுணையாக இருந்தார்.

ப்ரியதர்ஷன் மூலமாகத்தான் சினிமாவுக்கு வந்தேன். முதன்முதலில் வஸந்தின் இயக்கத்தில், சூர்யாவுடன் அறிமுகமானேன். அப்போது வஸந்த்திடம் நிறைய திட்டு எல்லாம் வாங்கியிருக்கிறேன்.

சென்னையில் நான் பார்த்த, என்னை கவர்ந்த முதல் ஆள் சூர்யா தான். என்னுடைய உலகமே அவர் தான். இப்போது வரை என் பக்கத்தில் என்னை தாங்கும் ஒரு தூண் போன்று இருக்கிறார்.

இப்படி ஒரு மனிதரை நான் திருமணம் செய்தது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது.தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட பிற மொழிகளில், பெண்களை மையப்படுத்தி நிறைய படங்கள் வருகிறது.

தமிழில் இதுபோன்ற படங்கள் வெளிவருவதில்லை. அனேகமாக இந்தப்படம் முதல்படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். சூர்யா இந்த படத்தை ஏதோ தயாரிக்க வேண்டும் என்பதற்காக தயாரிக்கவில்லை.

இந்த படக்குழு மீதும், கதையின் மீதும் நம்பிக்கை வைத்துதான் படத்தை தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் நடித்த போது டெக்னீஷியன்கள், ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அவர்களது மனைவியோடு வந்து வேலை பார்த்தார்கள்.

அபிராமி, டெல்லி கணேஷ், நாசர் உள்ளிட்டவர்களுடன் நடித்தது ஒரு புதிய அனுபவத்தை தந்தது. இப்படத்தில் நடிக்க எனக்கு ஆதரவும், ஊக்கமும் தந்த அத்தனை பேருக்கும் என் நன்றி.

இவ்வாறு ஜோதிகா பேசினார்.  

விழாவில் சூர்யா, கார்த்தி, சிவக்குமார் தம்பதியர், வஸந்த், ராதா மோகன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Post your comment





Related News
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
இசைத்துறையில் காலடி பதித்த சூர்யா- இசையமைப்பாளராகவா? இல்லை?
ஜோதிகாவுக்கு பைக் ஓட்ட கற்றுத்தரும் சூர்யா – வைரலாகும் புகைப்படங்கள்!
ஜோதிகாவை மாற்றிய 36 வயதினிலே படம்!
36 வயசு ஜோதிகாவின் கெடுபிடி!
புதிய சகாப்தம் படைப்பாரா ஜோதிகா?
வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்த ஜோதிகா
ஜோதிகா நடித்த படத்தை 100 நாட்கள் ஓட்ட சூர்யா திட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions