ஜோதிகா நடித்த படத்தை 100 நாட்கள் ஓட்ட சூர்யா திட்டம்

Bookmark and Share

ஜோதிகா நடித்த படத்தை 100 நாட்கள் ஓட்ட சூர்யா திட்டம்

சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு  நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு குடும்பத்தலைவியான ஜோதிகா இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு  நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் அரிதாரம் பூசியுள்ள படம் என்ற பெருமை '36 வயதினிலே' படத்துக்கு கிடைத்திருக்கிறது.

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படத்தின் ரீ-மேக்கான இப்படத்தை சூர்யாவே தன்னுடைய சொந்த பட நிறுவனமான '2டி என்டர்டெயின்மென்ட்' சார்பில் தயாரித்துள்ளார்.

'ஹவ் ஓல்ட் ஆர் யூ' மலையாள படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸே '36 வயதினிலே' படத்தையும் இயக்கியிருக்கிறார். ஜோதிகாவுடன் ரகுமான், அபிராமி முதலானோர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் நடித்துள்ள படம் இது என்ற ஒரு விஷயமே 36 வயதினிலே படத்துக்கு கோலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

36 வயதினிலே படத்தின் பாடல்கள் வருகிற 29- ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு தன் சகாக்களை முடுக்கிவிட்டிருக்கிறார் சூர்யா. இசைவெளியீடு நடைபெற்ற சில நாட்களில் '36 வயதினிலே' படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ள சூர்யா, சென்னை ஏரியாவில் தானே வெளியிட உள்ளார்.

அது மட்டுமல்ல தன் மனைவி மறுபிரவேசம் செய்யும் படம் என்பதால் எப்படியாவது 100 நாட்கள் ஓட்ட வேண்டும் என எண்ணி உள்ளாராம்.


Post your comment





Related News
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
இசைத்துறையில் காலடி பதித்த சூர்யா- இசையமைப்பாளராகவா? இல்லை?
ஜோதிகாவுக்கு பைக் ஓட்ட கற்றுத்தரும் சூர்யா – வைரலாகும் புகைப்படங்கள்!
ஜோதிகாவை மாற்றிய 36 வயதினிலே படம்!
36 வயசு ஜோதிகாவின் கெடுபிடி!
புதிய சகாப்தம் படைப்பாரா ஜோதிகா?
வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்த ஜோதிகா
என்னுடைய உலகமே சூர்யா தான் - ஜோதிகா பேச்சு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions