ஜோதிலக்ஷ்மி பட பாடல்கள் வெளியீடு

Bookmark and Share

ஜோதிலக்ஷ்மி பட  பாடல்கள் வெளியீடு

டோலிவுட்டின் அதிரடி வெற்றிப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் இயக்கத்தில் பெண்ணை மையப்படுத்திய ஜோதிலக்ஷ்மி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

நடிகை சார்மி விலைமாதுவாக நடித்துள்ள ஜோதிலக்ஷ்மி படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களிடம் படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் கல்யாண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுனில் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விலைமாது  வேடம் என்றாலும் சண்டைக்காட்சிகளிலும்  துணிந்து சார்மி நடித்து அசத்தியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு அழைப்பிதழ் கூட டோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பெண்ணின் முதுகில் திறந்திடு எழுதியிருந்த பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழுக்கு சர்ச்சை இயக்குநர்  ராம் கோபால் வர்மா தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.

இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.ஜோதிலக்ஷ்மி படம் ஜூலை  மாதம் 12 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions