கேரளாவில் கார் விபத்தில் சிக்கிய நடிகை ஜோதிர்மயி

Bookmark and Share

கேரளாவில் கார் விபத்தில் சிக்கிய நடிகை ஜோதிர்மயி

'தலைநகரம்', 'நான் அவன் இல்லை', 'சபரி' உள்பட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை ஜோதிர்மயி. கேரளாவைச் சேர்ந்த இவர் ஏராளமான மலையாள படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவருக்கும், மலையாள டைரக்டர் அமல்நீரத்துக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கொச்சியில் வசித்து வந்த இவர்கள் மாகே பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

கொங்கிபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த பஸ் இவர்களின் கார் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் நடிகை ஜோதிர்மயி மற்றும் அவரது கணவர் அமல்நீரத் இருவரும் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

விபத்து பற்றி தெரிய வந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு வேறு காரில் கொச்சிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions