ஜோதிகாவின் பாராட்டில் உருகிப்போன நந்திதா

Bookmark and Share

ஜோதிகாவின் பாராட்டில் உருகிப்போன நந்திதா

ஜோதிகா நடித்த படங்களில் ராதாமோகன் இயக்கத்தில் அவர் நடித்த மொழி முக்கியமான படம். இந்த படத்தில் மாற்றுத்திறனாளியாக அர்ச்சனா என்ற ரோலில் நடித்த ஜோதிகாவுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. அந்த வகையில், பேரழகன், சந்திரமுகி, மொழி என மூன்று படங்களுக்கு தமிழக அரசிடமிருந்து சிறந்த நடிகைக்கான விருது பெற்றிருக்கிறார் ஜோதிகா.

இந்நிலையில், தற்போது 36 வயதினிலே படம் மூலம் கோலிவுட்டில் ரீ-என்ட்ரியாகியிருக்கும் ஜோதிகா, மொழி படத்தை இயக்கிய ராதாமோகனின் உப்புக்கருவாடு படத்தின் டீசரை நேற்று வெளியிட்டபோது அப்படநாயகி நந்திதாவைப்பற்றி பெருமையாக பேசியிருக்கிறார்.

குறிப்பாக, இந்த படத்தில் நந்திதா நடித்திருப்பது போன்ற கதாபாத்திரம் எல்லா நடிகைகளுக்கும் கிடைத்து விடுவதில்லை. அது நந்திதாவுக்கு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் நந்திதா ரொம்ப கொடுத்து வைத்தவர் என்றே சொல்வேன் என்று கூறியிருக்கிறார்.

அதைக்கேட்டு, தான் வெகுவாக ரசித்து வரும் ஜோதிகாவே தன்னை இப்படி பெருமையாக பேசியது நந்திதாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாம். அதோடு, ஒரு முன்னணி நடிகையே நான் நடித்துள்ள கதாபாத்தித்தை பெருமையாக பேசுகிறார் என்றால் இந்த உப்புக்கருவாடு எனக்கு ஒரு பெரிய படம்தான். மேலும், இனிமேல் இதுபோன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நான் நடிப்பேன் என்றும் தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார் நந்திதா.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions