நடிப்பை தொடர விரும்பாத இசையமைப்பாளர் கே!

Bookmark and Share

நடிப்பை தொடர விரும்பாத இசையமைப்பாளர் கே!

இசையமைப்பாளர்கள் ஹீரோக்களாக வலம் வரத் தொடங்கிவிட்ட இந்த நிலையில் யுத்தம் செய், முகமூடி, காடு, ஆரோகனம், கிருமி உள்பட பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் கே, கள்ளப்படம் என்ற படத்தில் ஒரு இசையமைப்பாளர் கேரக்டரில் நடித்திருந்தார். 

ஆனால், தொடர்ந்து தான் இசையமைக்கும் படங்களின் இயக்குனர்கள் நடிக்கக் கேட்டுக்கொண்டும் அதை நடிக்க அவர் மறுத்து வருகிறார். 

இதுகுறித்து கே கூறுகையில், “கள்ளப்படம் படத்தில் இசையமைப்பாளர் வேடத்திலேயே நடிக்கச் சொன்னதால் நடித்தேன். மற்றபடி தொடர்ந்து நடிக்கும் ஆர்வம் என்னிடம் இல்லை. அதனால்தான் மறுத்து வருகிறேன். அதேசமயம், இசையில் புதுமைகள் செய்ய வேண்டும் என்பதில் தான் எனது முழு கவனம் உள்ளது. 

அதனால் தான், நான் இதுவரை இசையமைத்துள்ள படங்களில் மலையாளத்தில் பஹத்பாசில் நடித்த அன்னயும் ரசூலும் படத்துக்கு எனக்கு பெயர் கிடைத்தது. அந்த படத்தைப் பார்த்துதான் என்னை கிருமி படத்துக்கு புக் பண்ணினர். 

இந்த கிருமி படம் தமிழில் எனக்கு திருப்புமுனையாக அமையும் என்கிறார்.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions