கே.பாலசந்தர் அறக்கட்டளை துவக்க விழா துவங்கியது

Bookmark and Share

கே.பாலசந்தர் அறக்கட்டளை துவக்க விழா துவங்கியது

இந்திய சினிமாவின் இயக்குநர் சிகரம் என போற்றப்படுவர் கே.பாலசந்தர். பல வெற்றி படங்களை இயக்கிய கே.பாலசந்தர், 2014ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி காலமானார்.

அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது படைத்த படைப்புகள் என்றும் அழியாதவை. இன்று பாலசந்தருக்கு 85வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளில் அவரது பெயரில் அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது.

இதற்கான விழா இன்று(ஜூலை 9ம் தேதி) காலை 10 மணியளவில் சென்னை, டிஎன்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் துவங்கியது. பிரபல பின்னணி பாடகி சுதா ரகுநாதன் இறை வணக்கத்துடன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து பாலசந்தரின் மனைவி ராஜம் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சி நடந்து வருகிறது.

மாலை 6 மணியளவில் நடிகர் கமல்ஹாசன், பாலசந்தரின் அறக்கட்டளையை துவக்கி வைத்து பேசுகிறார். நிகழ்ச்சியில் பாலசந்தர் பெயரில் காக்கா முட்டை இயக்கநர் மணிகண்டன், சின்னத்திரை இயக்குநர் எம்.திருமுருகன், சின்னத்திரை எழுத்தாளர் ராமகிருஷ்ணன், நாடக நடிகர் காத்தாடி ராமமூர்த்தி ஆகியோருக்கு விருதுகளும் வழங்கி கவுரவிக்கப்பட இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் லதா ரஜினிகாந்த், சுதா ரகுநாதன், காத்தாடி ராமமூர்த்தி, தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, சின்னத்திரை மற்றும் வௌ்ளித்திரை கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சி நடந்து வருகிறது.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions