கே.பாலசந்தர் அறக்கட்டளை விவகாரத்தில் கமலின் வருத்தம்.?!

Bookmark and Share

கே.பாலசந்தர் அறக்கட்டளை விவகாரத்தில் கமலின் வருத்தம்.?!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் மறைவுக்குப் பிறகு அவரது பெயரில் ஒரு அறக்கட்டளையை துவக்கினார்கள். கே.பாலசந்தரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அறங்காவலர்களாகக் கொண்டு துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளையில் கே.பி. குடும்பத்தைச் சேராத ஒருவர் இடம்பெற்றுள்ளார் என்றால், அது இயக்குநர் வசந்த் மட்டுமே.கே.பாலசந்தர் அறக்கட்டளையின் துவக்கவிழா சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அறக்கட்டளையை தொடங்கி வைக்க கே.பாலசந்தர் குடும்பத்தினர் கமலை அழைத்தனர்.

கண்டிப்பாக வருகிறேன் என்று அவர்களிடம் உறுதியளித்தார் கமல். அதன் அடிப்படையில் கமலின் பெயர் போட்டு அழைப்பிதல் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.கடைசியில், கமல் வரவே இல்லை. அறக்கட்டளை துவக்கவிழா அன்று கமலை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

அதற்கான காரணம் கே.பாலசந்தரின் குடும்பத்தாருக்கே விளங்கவில்லை. இந்நிலையில், கே.பாலசந்தர் அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு தான் ஏன் செல்லவில்லை என்று சக நடிகர் ஒருவரிடம் கமல் சொன்னாராம்.

அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் தற்போது வெளியே கசிந்துள்ளது. கே.பாலசந்தர் அறக்கட்டளையில் தன்னையும் இணைக்கவில்லை என்ற வருத்தம் காரணமாகவே அந்த நிகழ்ச்சியை கமல் புறக்கணித்தாக பேசிக்கொள்கிறார்கள்


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions