பயம்தான் எனக்கு வெற்றியை கொடுத்தது! - கே.பாக்யராஜ்

Bookmark and Share

பயம்தான் எனக்கு வெற்றியை கொடுத்தது! - கே.பாக்யராஜ்

1979ல் சுவரில்லாத சித்திரங்கள் படத்தை இயக்கிய கே.பாக்யராஜ், அதையடுத்து தனது குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் புதியவார்ப்புகள் படத்தில் கதாநாயகனாகி விட்டார். அந்த படத்திற்கு பாக்யராஜே கதை எழுதியிருந்தார்.

அப்படி தனது திரைப்பயணத்தை தொடங்கிய கே.பாக்யராஜ், இப்போது வரை அதாவது சுமார், 35 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது படம் இயக்குவதில் இருந்து சற்று விலகியிருந்தாலும், பல படங்களுக்கு ஸ்கிரிப்ட் ஒர்க் வேலைகளில் பக்கபலமாக இருந்து வருகிறார்.

அதோடு, சமீபத்தில் துணை முதல்வர் படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தவர், தொடர்ந்து கேரக்டர் நடிகராகவும் நடித்து வருகிறார். ஆனால் சினிமாவுக்கு வந்து இத்தனை காலம் ஆகி விட்டபோதும், பாக்யராஜ்க்கு ஆரம்ப காலம்தொட்டு இருந்து வரும் பயம் இப்போதுவரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறதாம்.

அதாவது, எந்த படத்தை இயக்கினாலும் ஒவ்வொரு நாளும் பயந்து கொண்டேதான் இருப்பாராம். அப்படி பயந்து பயந்து இயக்கிய படங்கள் வெற்றி பெற்றாலும் அடுத்த படத்திலும் அவரது பயம் தொடருமாம். அதேபோல் சமீபகாலமாக அவர் நடிக்கிற படங்களிலும் அந்த பயம் இருக்கிறதாம்.

காரணம், சில படங்களில் என்னதான் கஷ்டப்பட்டு நடித்தாலும், எடிட்டிங்கில் அவரது காட்சிகள் கத்தரிக்கப்பட்டு விடுகிறதாம். அதனால் அந்த படங்கள் வெளியாகும்வரை அவர் நடித்த காட்சிகளுக்கு உத்தரவாதம் இல்லையாம்.

அதனால் இப்போது தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே அந்த காட்சிகள் படம் வெளியாகும்போதும் அப்படியே இருக்குமா? இல்லை கத்தரிக்கப்பட்டிருக்குமா? என்கிற பயத்துடனேயே இருந்து வருகிறாராம் பாக்யராஜ்.

ஆக, சினிமாவில் நான் வந்த காலத்தில் இருந்தே ஏதோ ஒரு வகையில் பயந்து கொண்டேதான் இருக்கிறேன் என்று சொல்லும் கே.பாக்யராஜ், ஆனால், அந்த பயம்தான் எனக்கு வெற்றியை கொடுத்து வருகிறது என்கிறார்.

 


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions