மகனுக்கு ஹீரோ சான்ஸ் கேட்கும் பாக்யராஜ்!

Bookmark and Share

மகனுக்கு ஹீரோ சான்ஸ் கேட்கும் பாக்யராஜ்!

சக்கரகட்டியில் அறிமுகமாவதற்கு முன்பே சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க வேண்டியவர் சாந்தனு. ஆனால் அந்த கதையை கேட்ட அவரது தந்தையான கே.பாக்யராஜ், கதை பிடிக்கவில்லை என்று சொல்லி மகனை நடிக்க வைக்க மறுத்து விட்டார்.

அதன்பிறகுதான் ஜெய்யை புக் பண்ணி படத்தை இயக்கினார் சசிகுமார். ஆனால், பாக்யராஜ் கதை பிடிக்கவில்லை என்று மறுத்த சுப்ரமணியபுரம் படம் சூப்பர் ஹிட்டானது. ஆக, தான் தவறு செய்து விட்டதை எண்ணி பின்னர்தான் பீல் பண்ணினார் பாக்யராஜ்.

அதனால் அதன்பிறகு சாந்தனுவை தேடிச்சென்ற கதைகளை தான் கேட்பதை விட அவரையே கேட்க வைத்து நடிக்க வைத்தார். இருப்பினும், இப்போதுவரை மார்க்கெட்டில் இருக்கிற இடமே தெரியாமல்தான் இருக்கிறார் சாந்தனு.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள துணை முதல்வர் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் கே.பாக்யராஜை அடுத்தபடியாக கதையின் நாயகனாக நடிக்க வைக்க சில இளவட்ட டைரக்டர்கள் கதை சொல்லி வருகிறார்களாம்.

ஆனால், அதைக்கேட்டு, இனிமேல் நான் ஹீரோவாக நடிப்பது சரிப்பட்டு வராது. அதனால் என் மகன் சாந்தனுவுக்கு ஹீரோ சான்ஸ் கொடுங்கள். எனக்கு ஏதாவது கேரக்டர் கொடுத்தாலும் போதும் என்று தனக்கு வரும் கதைகளை மகன் பக்கம் திருப்பி விடுகிறார் பாக்யராஜ்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions