காமெடி வேடத்தில் கே.பாக்யராஜ்!

Bookmark and Share

காமெடி வேடத்தில் கே.பாக்யராஜ்!

வாகை சூடவா படத்தில் விமலின் அப்பாவாக நடித்த கே.பாக்யராஜ், அதையடுத்து அப்பாவி, மாவீரன், நினைத்தது யாரோ, ஒருவர் மீது இருவர் சாய்ந்து என பல படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்து வந்தவர், துணை முதல்வர் படத்தில் லீடு ரோலில் நடித்தார்.

இந்த நிலையில், இதுவரை குணசித்ர வேடங்களின் மீது ஆர்வமாக இருந்த அவர் தற்போது காமெடி வேடங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார். அந்த வகையில், தன்னிடத்தில் உதவியாளராக பணியாற்றிய காவியன் என்பவர் இயக்கும் நாய் படாத பாடு என்ற படத்தில் தற்போது ஒரு கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார் பாக்யராஜ்.

புதுமுகங்கள் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் பாக்யராஜ், மட்டுமின்றி, அவரது சிஷ்யரான பாண்டியராஜனும் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். இதே படத்தில் டி.பி.கஜேந்திரனும் இன்னொரு காமெடி வேடத்தில் நடித்திருந்தபோதும், பாக்யராஜ்-பாண்டியராஜன் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் அப்படத்தில் ஹைலைட்டாக அமைந்திருக்கிறதாம்.

அதோடு, அவர்கள் இரண்டுபேரும் முதன்முறையாக அதிக காம்பினேஷன் காட்சிகளில் இந்த படத்தில்தான் நடிக்கிறார்கள்.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions